`தோப்பூர்' முதல் `தொகுதி இல்லை' வரை - தே.மு.தி.க-வின் 15 ஆண்டுக்கால அரசியல் ரீவைண்ட்!

தே.மு.தி.க-வின் 15 ஆண்டுக்கால அரசியல் பயணம் எப்படியிருந்தது என்பதை இன்ஃபோகிராபிக்ஸ் கொண்டு அலசுவோம்!
2005-ம் ஆண்டு, மதுரையை அடுத்த தோப்பூரில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது தே.மு.தி.க. இன்று கேட்ட எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. அ.தி.மு.க-வும், `தே.மு.தி.க விலகியது நம் கட்சிக்கு நல்லதுதான்' என்கிற மனநிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. முதல் தேர்தலில் 8.38 சதவிகித வாக்குகள் பெற்று ஆச்சர்யப்படவைத்த தே.மு.தி.க-வின் தற்போதைய நிலை, கவலைக்கிடமாகவே உள்ளதென அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
`பென்னாகரத்தில் தோற்றீர்களே' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சட்டசபையில் கேள்வி கேட்டு அதிரச்செய்தவர் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர் இப்போது தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாக இருந்துவருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போகிறதா அல்லது வேறெந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போகிறதா என்பது ஓரிரு நாள்களில் தெரியுமென்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர். இந்தநேரத்தில் அக்கட்சியின் 15 ஆண்டுக்கால அரசியல் பயணம் எப்படியிருந்தது என்பதை இன்ஃபோகிராபிக்ஸ் கொண்டு அலசுவோம்!
விஜயகாந்த்தும் தே.மு.தி.க-வும்!

தே.மு.தி.க சந்தித்த தேர்தல்கள்!

தேர்தல் களத்தில் விஜயகாந்த்!

தே.மு.தி.க-வின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!