1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics
1846 முதல் 2019 வரை காஷ்மீர் கடந்து வந்த பாதை குறித்த ஒரு தொகுப்பு...

கடந்த ஒருவார காலமாகத் தலைப்புச் செய்தியாக இருப்பது 'காஷ்மீர்'தான். பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டது தொடங்கி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுவரை தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த அதிரடி முடிவு இந்திய அரசியலில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஜம்மு-காஷ்மீரில் என்ன பிரச்னை என்பதையும் 1846 முதல் 2019 வரை காஷ்மீர் கடந்து வந்த பாதை என்ன என்பதையும் கீழுள்ள டைம்லைனில் காணலாம்...

