Published:Updated:

அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக் கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்-நடந்தது என்ன?

கோவிந்தசாமி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பால்கிரேஸ்

திண்டிவனம் அரசுக் கல்லூரி ஒன்றில், அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரம் விவாதப்பொருளான நிலையில், அக்கல்லூரி முதல்வர் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக் கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்-நடந்தது என்ன?

திண்டிவனம் அரசுக் கல்லூரி ஒன்றில், அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரம் விவாதப்பொருளான நிலையில், அக்கல்லூரி முதல்வர் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கோவிந்தசாமி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பால்கிரேஸ்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கிவருகிறது 'கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.’ இந்தக் கல்லூரி முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படம், கல்லூரி முதல்வராலேயே நீக்கப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது. இதற்காகப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கோவிந்தசாமி அரசுக் கல்லூரி முதல்வர் நாமக்கல் மாவட்டத்துக்கு அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

இதன் பின்னணி குறித்து அந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ``கடந்த 2017-ம் ஆண்டு, எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அப்போதைய கல்லூரி முதல்வர் நடராஜன் என்பவரிடம் அனுமதிபெற்று சட்டமேதை அம்பேத்கர் புகைப்படத்தை முதல்வரின் இருக்கைக்கு பின்புறமாக வைத்துள்ளனர். கல்லூரி நிறுவனர் கோவிந்தசாமியின் புகைப்படமும், இதுவரை பணியாற்றிய கல்லூரி முதல்வர்களின் பெயர்ப் பட்டியலும் இடப்புற சுவற்றில் மாட்டப்பட்டிருந்தன. 2017-ல் இருந்து நான்கு கல்லூரி முதல்வர்கள் இங்கு பணியாற்றிச் சென்றுள்ளனர். இதுவரை இந்தப் புகைப்படங்களை மாற்றுவது குறித்த சிறிய யோசனையும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் புதிய கல்லூரி முதல்வராக பால்கிரேஸ் பதவி ஏற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கல்லூரியைப் பொறுத்தவரை எந்த ஒரு முடிவெடுப்பதென்றாலும், ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டித்தான் எடுப்பார்கள். ஆனால், அப்படி எதையுமே செய்யாமல், கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதியன்று அம்பேத்கர் புகைப்படத்தை தன்னிச்சையாகவே நீக்கிவிட்டு, கோவிந்தசாமி ஐயாவின் புகைப்படத்தை அந்த இடத்தில் மாட்டியிருக்கிறார் கல்லூரி முதல்வர் பால்கிரேஸ்.

அதற்கு மறு தினம், ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டி, "கல்லூரி நிறுவனர் கோவிந்தசாமி அவர்களின் புகைப்படத்தைத் தவிர, வேறு எந்தப் புகைப்படமும் முதல்வர் அறையில் இருக்கக் கூடாது" எனும் தீர்மானத்தைப் போட்டிருக்கிறார். அப்போதுதான் அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் பேராசிரியர்களுக்குத் தெரியவந்துள்ளது.

அச்சமயத்தில் ஒட்டப்பட்ட சில கண்டன சுவரொட்டிகள்.
அச்சமயத்தில் ஒட்டப்பட்ட சில கண்டன சுவரொட்டிகள்.

ஆகவே, எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர் நலச் சங்கத்தினர் நேரில் சென்று முதல்வர் பால்கிரேஸ் அவர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளனர். அதற்கு அவரோ, "எஸ்.சி/எஸ்.டி நலச் சங்கம் என அந்தப் புகைப்படத்தில் ஸ்டிக்கர் இருக்கிறது. அதனால்தான் நீக்கினேன்" என்று காரணம் கூறியுள்ளார். "அப்படியென்றால், நாங்கள் அந்தப் பெயரை மட்டும் நீக்கிவிடுகிறோம். புகைப்படத்தை அதே இடத்தில் மீண்டும் வையுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளனர் பேராசிரியர்கள். அதையும் அந்த அம்மையார் ஏற்க மறுத்துள்ளார். உடனே 16 தலைவர்களின் புகைப்படங்களை வைக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, அம்பேத்கர் புகைப்படத்தை மீண்டும் வைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு, "உங்கள் வீட்டில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே வைக்க முடியாது" என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் முதல்வர் அம்மையார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரடியாகக் கல்லூரிக்கு வந்து இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்தார். "போட்டோவை அங்கிருந்து நீக்கவேண்டிய அவசியம் என்ன... யார் சொல்லி இதைச் செய்தீர்கள்? அந்த போட்டோ எங்கே... எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். அப்போது, அந்த போட்டோ தெரியாமல் கீழே விழுவதைப்போல போட்டு கண்ணாடி உடைந்துவிட்டது. "சரி, வேறொரு நல்ல போட்டோவை எடுத்துவந்து இருந்த இடத்திலேயே வையுங்கள். இல்லையெனில், 16 தலைவர்களின் போட்டோக்களைத் தயார் செய்யுங்கள் நானே நேரில் வந்து வைக்கிறேன்" என்று கூறிய அமைச்சர், ரோசனை காவல் ஆய்வாளரிடம்... "என்னுடைய வாய்மொழி உத்தரவையே புகாராக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி, போட்டோ நீக்கப்பட்ட காரணம் குறித்துக் கூறுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

அமைச்சர். செஞ்சி மஸ்தான்
அமைச்சர். செஞ்சி மஸ்தான்

இந்நிலையில்தான், வி.சி.க-வின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சேரன், அம்பேத்கர் புகைப்படத்தை எடுத்துவந்து உள்ளே வைப்பதற்கு அனுமதி கேட்டார். "என்னிடம் அலுவலக ஊழியர் இல்லை. அதனால் போட்டோ வைக்க முடியாது" என்று மறுத்ததோடு, அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். மீண்டும் வந்து, "ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க முடியாது. வேறோர் இடத்தில் வேண்டுமானால் நானே வைக்கிறேன்" என்றார். அப்போதுதான் ஒரு பொதுத் தலைவரை சாதிய வன்மத்தோடு இவர்கள் பார்ப்பது தெளிவாகத் தெரியவந்தது. உடனே மாவட்டச் செயலாளர் வெளியே வந்து, அதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அங்கு வந்த தாசில்தார், அவரைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

மா.செ கொண்டு வந்த புகைப்படம், கல்லூரி முதல்வர் அறையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டது. இதற்கு மறுதினமே பா.ம.க-வினர் வந்து, "கோவிந்தசாமி போட்டோவை இப்போது மாற்றி வைத்துள்ள இடத்திலேயேதான் நிரந்தரமாக வைக்க வேண்டும். மீண்டும் மாற்றி வைக்கக் கூடாது" என்று கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்துவிட்டுச் சென்றனர். இதனால் ஒரு பொதுத் தலைவரின் புகைப்படத்தை இருந்த இடத்தில் வைக்கச் சொல்வதில் மேலும் சிக்கலாகிப்போனது. ஆகவே, இந்த விவகாரம் ஒருபோதும் சாதிய மோதலாக நடந்துவிடக் கூடாது, சுமுகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆகவேதான், அம்பேத்கர் புகைப்படம் சாதிய வன்மத்தோடு நீக்கப்பட்டது குறித்தும், கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் எஸ்.சி/எஸ்.டி ஆணையம், உயர்கல்வித்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குப் புகார் அனுப்பினோம்.

பணியிட மாற்றம் ஆணை
பணியிட மாற்றம் ஆணை

இதற்கிடையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நேரில் வந்து விசாரணை நடத்தியிருந்தார். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்றுவந்தது. இந்தக் கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்தபோது இதே மாதிரியான ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கான கண்டனப் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்துதான் இந்தக் கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இங்கு வந்த பின்பும் அந்தச் சாதிய வன்மத்தைக் கைவிடாமல் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில்தான், அவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றனர் விரிவாக.

இந்த விவகாரம் குறித்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள பால்கிரேஸிடம் பேசினோம். "இந்தக் கல்லூரி தொடங்கி இத்தனை ஆண்டுக்காலம் ஆகியும் மத்திய அரசின் 'தேசிய தர மதிப்பீட்டுக் குழு' இன்னும் வரவேயில்லை. இதுவரை இந்தக் கல்லூரியில், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் அடாவடித்தனம் செய்துவந்தார்கள். எனவே, கல்லூரியை மேம்படுத்த வேண்டுமென நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தேன். இது பிடிக்காத சுமார் 15 ஆசிரியர்கள், சாதி என்பதை மையப்படுத்திச் சொன்னால் இவர்களை பணியிடமாற்றம் செய்துவிடுவார்கள் என நினைத்து செயல்பட்டுவந்தார்கள். இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினராக இருப்பதாலும், அந்தச் சமூகத்தினர் அவரை கவனித்ததாலும் பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறார்.

பால்கிரேஸ்
பால்கிரேஸ்

எனக்கு உண்மை ஜெயிக்க வேண்டும், நீதி வெல்ல வேண்டும். 'எஸ்.சி/எஸ்.டி நலசங்கம்' எனும் வார்த்தை அம்பேத்கரின் புகைப்படத்தில் இருந்தது. இப்பெயரைக் காரணம் காட்டி மற்றொரு தரப்பிலிருந்து தங்களுடைய புகைப்படத்தை வைக்க வேண்டும் எனச் சொல்லி அழுத்தம் வந்தது. அதனால்தான் எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்று இந்தப் புகைப்படத்தை நீக்கினேன். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது" என்றார்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

இந்நிலையில், "திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கல்லூரியில் தவறுகளைத் திருத்த முயன்ற முதல்வருக்குப் பரிசு இட மாற்றமா... அதை, உடனே திரும்பப் பெறுக!" எனும் தலைப்பில் தனது விரிவான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism