Published:Updated:

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ``மிளகு'னு சொல்லிட்டு இலவம்பஞ்சு கொட்டைய தர்றாங்க..." - கொதிக்கும் மக்கள்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு

``வெறும் இலவம்பஞ்சு கொட்டையையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகுனு பாக்கெட் செஞ்சு கொடுத்திருக்காங்க." எனக் கொதிக்கிறார்கள் மக்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ``மிளகு'னு சொல்லிட்டு இலவம்பஞ்சு கொட்டைய தர்றாங்க..." - கொதிக்கும் மக்கள்!

``வெறும் இலவம்பஞ்சு கொட்டையையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகுனு பாக்கெட் செஞ்சு கொடுத்திருக்காங்க." எனக் கொதிக்கிறார்கள் மக்கள்.

Published:Updated:
பொங்கல் பரிசுத் தொகுப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொடும்பம்பள்ளி, செலந்தம்பள்ளி, கரம்பூர் உள்ளிட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கலப்படப் பொருள்கள் இருந்ததாகத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் நியாய விலை கடைக்குச் சென்றோம். அங்குப் பொதுமக்கள் நியாயவிலைக் ஊழியர்களுடன் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களைக் கையில் வைத்துக்கொண்டு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.

ராஜபாளையம் நியாய விலை கடை
ராஜபாளையம் நியாய விலை கடை

அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னவென்று விசாரித்தோம். நம்மிடம் பேசிய பொதுமக்கள், ``அரசாங்கம் பொங்கலுக்கு கொடுக்குற பரிசுப் பொருள்கள் எல்லாமே கலப்படமா இருக்கு. அந்த 21 பொருள்கள்ல எதுவுமே தரமா இல்ல. இந்த பரிசுத் தொகுப்புல ரேஷன் கடைகாரங்க கொடுத்த மிளகு பாக்கெட்டை திறந்து பார்த்தோம். அது மிளகே இல்ல... வெறும் இலவம்பஞ்சு கொட்டையையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகுனு பாக்கெட் செஞ்சு கொடுத்திருக்காங்க. அதேமாதிரி மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகள்'ல வெறும் மரத்தூள் எதையோ கலந்து கொடுத்திருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொடுத்த பொருள்கள்ல பெரும்பாலும் எல்லாமே கலப்படமா இருக்கு. சரி இதுதான்னு பார்த்தா 21 பொருள்கள்'னு சொல்லிட்டு நெறைய பேருக்கு உப்பு பாக்கெட் கூட கிடைக்கல. சாமான்ய மக்கள்தானே வாங்கிட்டு போறாங்க.. அவங்களுக்கு ஏன்னா ஆனா நமக்கென்னன்னு அதிகாரிங்க உடல் நல விவகாரத்துல அலட்சியமா இருக்காங்க. இந்த கலப்பட பொருள்களைச் சமைத்து சாப்பிட்டா எங்க உடல்நிலை என்ன ஆகுறது. பேருக்கு பொங்கல் பொருள்னு எதையோ கொடுக்குறாங்க!" என்றனர் ஆதங்கத்துடன்.

பொங்கல் பொருள்
பொங்கல் பொருள்
பொங்கல் பொருள்
பொங்கல் பொருள்

பொதுமக்களின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நியாயவிலைக்கடை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டோம். ``நல்ல தரமான பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். ஆனால், இந்த நியாயவிலைக்கடைக்கு தரமற்ற மற்றும் கலப்பட பொருள்கள் வந்திருக்கிறது.

நியாயவிலை கடை
நியாயவிலை கடை

இது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட கான்டராக்டரோட தவறு. பொதுமக்கள் அனைவருக்கும் புதிதாகப் பொருள்கள் வழங்க உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வாங்கிச் சென்றவர்களுக்கும் புதிதாக மீண்டும் பொங்கல் பொருள்கள் வழங்கப்படும்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism