Published:Updated:

எகிறும் பருத்தி நூல் விலை - போராட்டத்தில் குதித்த திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள்

நூல் விலை உயர்வு

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

எகிறும் பருத்தி நூல் விலை - போராட்டத்தில் குதித்த திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள்

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Published:Updated:
நூல் விலை உயர்வு

பருத்தி நூல் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. மே முதல் வாரத்தில் ரூ.441க்கு விற்ற ஒரு கிலோ நூலின் விலை, தற்போது ரூ.481 ஆக உயர்ந்துள்ளது.

நூல் விலை உயர்வு
நூல் விலை உயர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 18 மாதங்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான நூல்களின் விலை 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஜவுளித்துறை முழுவதும் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத்துறையில் சுமார் 20,000 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக அவர்கள் அனைவரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

திருப்பூர்
திருப்பூர்

இதையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்க திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். “முக்கியமாக பல பெரு நிறுவனங்கள் இடைத்தரகர்களுடன் இணைந்து செயற்கையாக பருத்தியை பதுக்கி வைத்து, செயற்கையான விலை உயர்வை உருவாக்குகின்றனர்.

பருத்தி நூல்
பருத்தி நூல்

எனவே மத்திய அரசின் பருத்தி கழகமே விவசாயிகளிடம் பருத்தியை வாங்கி விற்க வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால் திருப்பூரில் மட்டுமே நாளொன்றுக்கு ரூ.360 கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

பருத்தி
பருத்தி

அதேபோல நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஜவுளித்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism