சென்னை மாநகராட்சி துணை மேயர் ரேஸில் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவுபெற்ற சிற்றரசுவுக்கு பதவி வழங்கப்படவில்லை என்கிற தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. அதேநேரத்தில் சத்தமே இல்லாமல், உதயநிதி ரூட் மூலம் திருப்பூர் மாநகராட்சி மேயர் ரேஸில் வலுவான மாவட்டப் பொறுப்பாளரை முந்தி மேயராகியிருக்கிறார் தினேஷ்குமார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை, தொடக்கத்திலிருந்தே மாவட்டப் பொறுப்பாளர் பத்மநாபன், வடக்கு மாநகரப் பொறுப்பாளர் தினேஷ்குமார் பெயர்கள் அடிபட்டன.
பத்மநாபனுக்கு அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் ஆதரவு இருந்தது. தவிர, மாவட்டப் பொறுப்பாளராகச் சிறப்பாக செயல்பட்டதால் பத்மநாபனே மேயராக அறிவிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், 40 வயதே ஆகும் தினேஷ்குமாரும் படிப்பு, களப்பணி என எல்லாவற்றிலும் போட்டியைக் கொடுத்தார். ஆஸ்திரேலியாவில் எம்.ஐ.பி படித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தே.மு.தி.க-வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தினேஷ், 2,63,463 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். அப்போது தி.மு.க மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. தேர்தல் வியூகம், மக்களிடம் எளிமையாகப் பேசுதல் போன்றவற்றால் கவனம் ஈர்த்தார் தினேஷ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2016-ம் ஆண்டு அவரை தே.மு.தி.க-விலிருந்து தி.மு.க தூக்கியது. பத்மநாபன் வலுவாக இருந்தாலும், தினேஷ்குமாருக்கு உதயநிதி ஸ்டாலினிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால், பத்மநாபன் பெயர் தீவிரமாக அடிபட்டாலும், கடைசி நேரத்தில் தினேஷ்குமார் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ்குமார் தனது சுய விவரத்தில்,

கருணாநிதி, ஸ்டாலின் படங்களை விட உதயநிதி படம் பெரிதாக இடம்பெற்றிருப்பது உண்மையை உணர்த்தும். திருப்பூர் மாநகராட்சி மட்டுமல்லாமல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை போன்ற நகராட்சிகளின் தலைவர் வேட்பாளர்களாக இளைஞர் அணியினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.