Published:Updated:

திருவண்ணாமலை: ஸ்டாலின் தங்கிய அறை, எ.வ.வேலு வீடுகளில் வருமான வரித்துறை திடீர் சோதனை

முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதியின் தி.மு.க வேட்பாளருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின், எ.வ.வேலுவுக்குச் சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் தங்கினார். இன்றைய காலை உணவை அங்கு முடித்த ஸ்டாலின், 10:45 மணிக்குப் புறப்பட்டு, காந்தி சிலை சந்திப்பில் எ.வ.வேலு உள்ளிட்ட எட்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அருணை பொறியியல் கல்லூரியிலிருந்து ஸ்டாலின் வெளியேறும் வரை காத்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தனர். கல்லூரி வளாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அதிகாரிகள், ஸ்டாலின் தங்கியிருந்த அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சல்லடையாகச் சோதனையிட ஆரம்பித்தனர். ஸ்டாலின் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ரெய்டு குறித்த தகவல் வெளியானதால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! - பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்...

அதேபோல், எ.வ.வேலுவின் திருவண்ணாமலை மற்றும் சென்னை வீடுகள், அவருக்குச் சொந்தமான அறக்கட்டளை அலுவலகம், நண்பர்களின் வீடுகல் என அனைத்து இடங்களிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு