Published:Updated:

``செருப்பால் அடித்தால் எங்களைக் கேட்காதீர்கள்!" - பாஜக, கம்யூ., கட்சிகளைச் சாடிய திரிணாமுல் எம்.பி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

``உண்மையாகவே நீங்கள் அப்படிப் பேச விரும்பினால், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராகப் பேசுங்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்." - திரிணாமுல் எம்.பி சவுகதா ராய்

``செருப்பால் அடித்தால் எங்களைக் கேட்காதீர்கள்!" - பாஜக, கம்யூ., கட்சிகளைச் சாடிய திரிணாமுல் எம்.பி

``உண்மையாகவே நீங்கள் அப்படிப் பேச விரும்பினால், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராகப் பேசுங்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்." - திரிணாமுல் எம்.பி சவுகதா ராய்

Published:Updated:
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அண்மையில் அந்த மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனம் தொடர்பான ஊழலில் ஆளுங்கட்சி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார். அதிலிருந்தே பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில, திரிணாமுல் காங்கிரஸையும் அதன் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களையும் தொடர்ச்சியாக விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சவுகதா ராய் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சவுகதா ராய், ``பா.ஜ.க அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர்கள் யாராவது இங்கு இருந்தால் கவனமாகக் கேளுங்கள். திரிணாமுல் காங்கிரஸைத் தாக்கிப்பேசும்போது, யாரேனும் ஒட்டுமொத்த கட்சியினரையும் திருடன் என முத்திரை குத்தி கண்ணியத்தை மீறினால், அப்போது எங்கள் கட்சிக்காரர்கள் உங்களைச் செருப்பால் அடித்தால் அதற்கு எங்களைக் குறை சொல்லாதீர்கள். உண்மையாகவே நீங்கள் அப்படிப் பேச விரும்பினால், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராகப் பேசுங்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்" என்று காட்டமாகக் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

சவுகதா ராயின் இத்தகைய பேச்சுக்கு எதிர்வினையாற்றிய மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், ``வங்காள மக்கள் கூடிய விரைவிலேயே பொதுவெளியில் ஊழல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திரும்புவார்கள். சவுகதா ராய் போன்ற தலைவர்கள் அதை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.