Published:Updated:

Election Updates: `32 தொகுதிகள் ஒதுக்கீடு?’ - அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு?

தே.மு.தி.க. 
தே.மு.தி.க. 

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அப்டேட்ஸ்....!

12 Mar 2021 3 PM

அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு?

தினகரன்
தினகரன்
ம.அரவிந்த்

அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தே.மு.தி.க வட்டாரத்தில் சொல்லப்பட்டுகிறது.

12 Mar 2021 1 PM

கோவை தெற்கு தொகுதியில் கமல்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி பா.ஜ.கவுக்கும், தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

12 Mar 2021 9 AM

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தின் தேர்தல் களம் இன்று முதல் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்று காலை 10 மணி முதல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 19 வரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் வேட்புமனு பெறப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதலை மனதில்கொண்டு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு