Published:Updated:

பிரசாரக் களத்தில் வாரிசுகள் பராக்... பராக்!

ஆதவன்
பிரீமியம் ஸ்டோரி
ஆதவன்

முதல்வர் பழனிசாமியின் மகன் அதிசயமாக இந்தமுறை பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும்போது மட்டும் அவருடன் வந்தார்.

பிரசாரக் களத்தில் வாரிசுகள் பராக்... பராக்!

முதல்வர் பழனிசாமியின் மகன் அதிசயமாக இந்தமுறை பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும்போது மட்டும் அவருடன் வந்தார்.

Published:Updated:
ஆதவன்
பிரீமியம் ஸ்டோரி
ஆதவன்

கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்களுக்காக தொகுதியில் பிரசாரம் செய்கிறார்கள் என்றால், இவர்களின் வாரிசுகளும் குடும்பத்தினரும் அவர்களுக்காக வீதி வீதியாகப் பிரசாரத்தில் சுற்றிச்சுழல்கிறார்கள். இதில் சில வேட்பாளர்களின் வாரிசுகள் சிறுவர்கள், சிறுமிகள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ‘தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், மாநில அரசின் வசம் உள்ளது. எனவே, இது தொடர்பாகப் புகார்கள் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சொல்லியிருக்கும் நிலையில், தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையோகூட இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது!

சிறுவனுக்கு வேட்டி, சட்டை... வாரிசின் வாரிசு பிரசாரம்!

திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார். செந்தில்குமாரே வாரிசு என்கிற நிலையில், செந்தில்குமாரின் வாரிசு உட்பட அவரின் மொத்தக் குடும்பமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பழநியில் முகாமிட்டுள்ள செந்தில்குமாரின் மனைவி அருள்மெர்சி, மகன் ஆதவன், மகள் ஓவியமீனாட்சி ஆகியோர் அதிகாலையிலே பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள். இதில் 12 வயதேயான சிறுவன் ஆதவனுக்கும் வேட்டி, சட்டை அணிவித்து பிரசாரக் களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

ஆதவன்
ஆதவன்

இந்துக்கள் அதிகமிருக்கும் பகுதியில் பக்திமணம் கமழ பிரசாரம் செய்பவர்கள், இஸ்லாமியர் பகுதிக்குச் செல்லும்போது தலையில் குல்லா அணிந்து வாக்குச் சேகரிக்கிறார்கள். சமீபத்தில் பிரசாரத்தின்போது சிறுவன் ஆதவனுக்குக் காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டுவிட, பதறிப்போன தாத்தா ஐ.பெரியசாமி, ‘‘சாமி, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோப்பா... நான்கூட அங்க பிரசாரத்துக்கு வர்றேன்’’ என்றாராம். அதற்கு, “பரவாயில்லை தாத்தா, நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு, நொண்டியபடி பிரசாரக் களத்தில் வலம்வருகிறார் ஆதவன். இதைப் பார்க்கும் தொண்டர்களோ, “ஐ.பி அண்ணன் குடும்பத்துல மூணாவது தலைமுறையாவும் வாரிசை பலமா ரெடி பண்றாங்கபோல” என்கிறார்கள் கிண்டலாக!

ப்ரியதர்ஷினி
ப்ரியதர்ஷினி

அப்பாக்களுக்கு ஆதரவாக மகள்கள்!

விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருடன், 10-ம் வகுப்பு படிக்கும் அவரின் மகள் ரிதன்யா ப்ரியதர்ஷினி வலம்வருகிறார் என்றால், தி.மு.க வேட்பாளர் எம்.பழனியப்பனோ, டாக்டருக்குப் படிக்கும் தன் மகள் லாவண்யா லட்சுமியைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். “நான் மருத்துவராகி தொகுதி மக்களுக்கு இலவசமா மருத்துவ சேவை செய்யணுங்கிறதுதான் அப்பாவோட ஆசை” என்று நெக்குருகி வாக்கு சேகரிக்கிறார் லாவண்யா லட்சுமி.

லாவண்யா
லாவண்யா

இங்கே இப்படியென்றால் மதுரை திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்காக உலாவருகிறார் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவரின் மூத்த மகள் ப்ரியதர்ஷினி. இவர் `அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ செயலாளராகவும் இருக்கிறார். “என் தந்தை எங்களைக்கூட கவனிப்பதில்லை; எப்போதும் உங்களைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக் கிறார்’’ என்று பிரசாரத்தில் டச்சிங்காகப் பேசுகிறார். இதைக் கேட்கும் மக்களோ, “ம்க்கும்... எங்களைப் பத்தி என்னத்த சிந்திக்குறாரு. பொய் பொய்யா அள்ளிவிடாதம்மா” என்கிறார்கள் நக்கலாக!

“அம்மா வருவாங்க!”

ஒரத்தநாடு தொகுதியில் ஐந்தாவது முறையாகப் போட்டியிடும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கடந்த முறை தோல்வியடைந்ததால் இம்முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று தீவிரமாகச் செயல்படுகிறார். இதற்காக அப்பாவுக்கு முன்பாகவே பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுகிறார் வைத்தியின் மூத்த மகன் பிரபு. அரசு ஒப்பந்தத் தொழில் செய்துவரும் பிரபு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது கிசுகிசுப்பாக, “சீக்கிரமே எங்க அம்மா உங்க வீட்டுக்கு வருவாங்க” என்று ‘கோட் வேர்டு’ போலச் சொல்ல, தொகுதி மக்கள் குழம்பிவிடுகிறார்கள். இதுகுறித்துப் பேசும் வைத்தியின் முகாமோ, “பிரபுவின் அம்மா பெயர் தங்கம். தொகுதியிலிருக்கும் பெண்களுக்கு தங்கக்காசு கொடுக்கவிருக்கிறார்கள். இதைத்தான் ‘அம்மா வருவாங்க’ என்று குறியீடாகச் சொல்கிறார் பிரபு” என்கிறது விவரமாக!

திருச்சி கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வெல்லமண்டி நடராஜனுக்காக ஓடியாடி வேலை பார்க்கிறார் மகன் ஜவஹர். தன் எதிர்கால அரசியல் வாரிசாக நிர்ணயித்து, வேட்பாளர் நாமினேஷனில்கூட மாற்று வேட்பாளராக ஜவஹரைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் வெல்லமண்டி. தொகுதியில் மொத்த ‘பட்டுவாடா’ விஷயங்களையும் கவனித்துக்கொள்வது இவர்தான். “பூத்வாரியாக யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிற டேட்டா அண்ணனுக்கு அத்துப்படி” என்கிறார்கள் ஜவஹரின் ஆதரவாளர்கள்.

ஜவஹர்
ஜவஹர்

பின்னிருந்து இயக்கும் மிதுன்!

இவர்கள் இப்படியென்றால், முதல்வர் பழனிசாமியின் மகன் எப்போதுமே பொதுவெளியில் தலைகாட்டுவதில்லை. அதிசயமாக இந்தமுறை பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும்போது மட்டும் அவருடன் வந்தார். அதோடு சரி... எடப்பாடி வெளியூர் பிரசாரத்தில் பிஸியாக இருப்பதால், அவரின் மைத்துனர் வெங்கடேஷும், அண்ணன் கோவிந்தராஜும் எடப்பாடி தொகுதி முழுவதும் வலம்வந்து பிரசாரம் செய்கிறார்கள். மிதுன் வீட்டிலிருந்தபடியே ஐடி விங் வேலைகள், கொடுக்கல் - வாங்கல் சமாசாரங்களை மட்டும் கவனித்துக்கொள்கிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism