Published:Updated:

‘ஐஸ்’ செல்வப்பெருந்தகை... கலகலப்பு துரைமுருகன்... கலாய்த்த அப்பாவு!

சட்டமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
சட்டமன்றம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் கொடுப்பது வழக்கம்.

‘ஐஸ்’ செல்வப்பெருந்தகை... கலகலப்பு துரைமுருகன்... கலாய்த்த அப்பாவு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் கொடுப்பது வழக்கம்.

Published:Updated:
சட்டமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
சட்டமன்றம்

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ‘ஐஸ்’ பேச்சுகளைக் கேட்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்களே சற்று மிரண்டுதான் போகிறார்கள்... விளையாட்டுத்துறை பற்றிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “போதி தர்மர் மரபணுவில் வந்தவர்தான் நமது முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலினின் வயதுக்கும் இளமைக்கும் காரணம், வாரம்தோறும் அவர் சைக்கிள் ஒட்டுவதுதான்... இதை ராகுல் காந்தியும் அறிந்துவைத்திருக்கிறார். அடுத்த முறை ராகுல் சென்னை வரும்போது, ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்டுவார்’’ என்று சொல்ல... ‘இது எப்போ!’ என்றரீதியில் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்!

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அங்கு பார்வையாளர்கள் மாடம் இல்லாததால், சபையில் உதயநிதியின் பேச்சை அவரின் குடும்பத்தினர் நேரடியாகப் பார்க்க முடியவில்லை. தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபைக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில், உதயநிதி சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு அந்தத் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதிலளித்துப் பேசினார். இதை மாடத்தில் அமர்ந்திருந்த துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, ஸ்டாலினின் மகள் செந்தாமரை உள்ளிட்ட முதல்வரின் குடும்பத்தினர் அனைவரும் ரசித்துக் கேட்டனர்.

ஆளுநர் கான்வாய் மீது தாக்குதல் நடந்தது என்று கூறி சட்டமன்றத்தில் பிரச்னையைக் கிளப்பிய அ.தி.மு.க உறுப்பினர்கள், ஒருகட்டத்தில் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். ஆனால், அப்படி அறிவித்த பிறகும் அவர்கள் பேரவைக்குள்ளேயே நின்று பேசிக்கொண்டிருக்க... இதைக் கண்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்க வெளிநடப்புனு சொல்லிட்டீங்க... வெளியே போய் சட்டுபுட்டுனு டீ சாப்பிட்டுட்டு வந்து உக்காருங்க” என்றார் கிண்டலாக. இதையடுத்து, `எதிர்க்கட்சியினரின் வெளிநடப்பைக்கூட கலாய்க்கிறாரே சபாநாயகர்’ என்று புலம்பியபடியே வெளியேறினார்கள் அ.தி.மு.க உறுப்பினர்கள்!

‘ஐஸ்’ செல்வப்பெருந்தகை... கலகலப்பு துரைமுருகன்... கலாய்த்த அப்பாவு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கையின்போதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் கொடுப்பது வழக்கம். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் மானியக் கோரிக்கையின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை அலுவலர்கள், பத்திரிகையாளர்களுக்கு அசைவ உணவுகள், சைவ உணவுகள் என தனித்தனியாக விருந்து களைகட்டும். ஆனால், இப்போது அசைவ உணவுக்கு தடா போட்டுவிட்டார்கள். சைவ உணவிலும் அளவுச் சாப்பாடுதான்!

அ.தி.மு.க உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க உறுப்பினர்களேகூட நிதி தொடர்பாக ஏதாவது கருத்து சொல்ல ஆரம்பித்தால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனே எழுந்து ‘‘இதற்கு நான் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார். இதனால் நேரம் கடந்து செல்வதை கவனித்த சபாநாயகர், பழனிவேல் தியாகராஜன் இருக்கையைவிட்டு எழுந்தாலே ‘‘சீக்கிரமா பேசுங்க... இல்லைன்னா கடைசியா நேரம் தர்றேன்... அப்ப பேசுங்க” என்று சொல்லி நிதியமைச்சரை அமரவைப்பதில் குறியாக இருக்கிறார்.

மூத்த அமைச்சர் துரைமுருகன் அவையில் இருந்தாலே, அவை கலகலப்பாக இருக்கும். கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சபைக்கு சில நாள்கள் அவர் வரவில்லை. இம்முறை மீண்டும் சபைக்கு வந்தவுடன் பேசிய துரைமுருகன், “நான் சபையில் இல்லாமல் சபை டல்லடித்துவிட்டதாக அனைவரும் வருத்தப்பட்டார்கள். நான் வந்தவுடனேயே கலாட்டா ஆரம்பித்துவிட்டது” என்று சொல்ல, சபையில் அனைவரும் சிரித்துவிட்டார்கள். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்க, அவரை இடைமறித்து எழுந்த துரைமுருகன், “இங்க பாருங்க... நாங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது இப்படித்தான் பேசுவோம். நீங்க எதிர்க்கட்சியாக இருந்தாலும் இப்படித்தான் பேசுவீங்க. அது எல்லாருக்கும் தெரியும். இப்ப பேச்சை முடிங்க” என்று தனக்கே உரிய பாணியில் கலாய்க்க... எடப்பாடி உட்பட அனைவருமே சிரித்துவிட்டார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism