Published:Updated:

சபாநாயகர் மாநாட்டில் பாய்ச்சல் காட்டிய அப்பாவு... பின்னணி என்ன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு
சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு ( Twitter )

சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு பேசியதற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின்ன் சிறப்பான சிந்தனை, பேச்சுத்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனவும் பாராட்டப்படுகிறார். அப்பாவு இப்படிப் பேசியதன் பின்னணி என்ன?

இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் 82-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துகொண்டார். நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட அனைத்து மாநில சட்டமன்ற சபாநாயகர்களும் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் சபாநாயகர் மு.அப்பாவு கலந்துகொண்டார். டெல்லியிலிருந்து சண்டிகருக்கு சென்ற விமானத்தில் அருகருகே பயணம் செயத ஓம் பிர்லா, அப்பாவு இருவரும் உலக நடப்புகளை விவாதித்துள்ளனர். சண்டிகரிலிருந்து சிம்லாவுக்குச் செல்ல ஓம் பிர்லாவுக்கு தனி ஹெலிகாப்டர் தயாராக இருந்திருக்கிறது. அந்த ஹெலிகாப்டரிலேயே, அப்பாவு-வும் பயணித்திருக்கிறார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Twitter

சபாநாயகர் மாநாட்டில் பேசிய அப்பாவு, ``நமது நாட்டின் சில அரசுகள், சட்டசபைகளைத் தபால்பெட்டியாகவும் ரப்பர் ஸ்டாம்புகளாகவும் மட்டுமே வைத்துள்ளன. `சட்டசபை என்பது அதிகாரம் குடிகொண்டுள்ள நிறுவனம் அல்ல, அது சமூகநலனுக்கான இடம்’ எனப் பெரியார் கூறியிருக்கிறார். சட்டசபைச் செயல்பாடுகளில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகள் பற்றி நீதிமன்றங்களே விமர்சிக்க மறுத்த காலமும் இருந்தது. ஆனால், சமீபகாலமாக சபாநாயகரின் முடிவுகள் பற்றி நீதிமன்றங்கள் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளன. இப்போது சட்டசபையை இறையாண்மையுடனும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு சபாநாயகர்கள் மீது விழுந்துள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்போது சில நேரம் ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டுவிடுகிறார். அந்தத் தீர்மானத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி அனுப்புவதில்லை” என்றவர்,

``கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது"
 -மத்திய அரசுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை!

”குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டிய சில தீர்மானங்களும் இப்படிக் கிடப்பில் போடப்படுவதால் அவற்றின்மீது உரிய காலத்தில் முடிவெடுக்கப்படுவதில்லை. இது சட்டசபையின் அதிகாரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிடுகிறது. எனவே எந்தெந்தத் தீர்மானங்கள், எவ்வளவு காலத்துக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது பற்றியும், அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு காலக்கெடுவை வகுப்பதற்கும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டால், அது குறித்த காரணங்களும் சொல்லப்பட வேண்டும்.

அப்பாவு - ஓம் பிர்லா
அப்பாவு - ஓம் பிர்லா
Twitter

அப்போதுதான் அந்தத் தீர்மானத்திலுள்ள குறைகளைத் திருத்திக்கொண்டு, மற்றொரு மசோதாவை நிறைவேற்ற முடியும். 10-வது அட்டவணைப்படி சட்டப்பேரவை நலன் சார்ந்து சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாக இருக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய வேண்டும்” எனவும், சபாநாயகர்களின் அதிகாரம் குறித்தும் அதில் மத்திய அரசு, நீதிமன்றங்களின் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு பேசியதற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்பாவு-வின் சிறப்பான சிந்தனை, பேச்சுத்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனவும் பாராட்டப்பட்டிருக்கிறார். உண்மையில் அப்பாவு இப்படிப் பேசியதன் பின்னணி என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஓம் பிர்லாவின் அறிமுக உரையிலேயே தமிழக சபாநாயகர் அப்பாவுக்கான முக்கியத்தும் சற்றுக் கூடுதலாக இருந்திருக்கிறது. அதேநேரம், மாநாட்டில் பேசிய அப்பாவு உரையின் சில இடங்களில் காரம் சற்றுத் தூக்கலாக இருந்திருக்கிறது. மாநில உரிமைகளில் பா.ஜ.க தலையிடுவதாக எழுந்த விமர்சனங்களின் அடிப்படையில் அது தொடர்பான சில கருத்துகளை அழுத்தமாக அப்பாவு ஒலித்திருக்கிறார். நீட் தேர்வுக்கு விலக்கு, எழுவர் விடுதலை, 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, போன்ற விவகாரங்களில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருவதைத் தொடர்ந்து தி.மு.க விமர்சித்துவருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்குத் துறைரீதியில் நடக்கும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வெளியான அறிக்கையையும், தமிழ்நாடு காவல்துறை ஆணையர் உடனான ஆளுநரின் சந்திப்பையும் தி.மு.க தலைமை ரசிக்கவில்லை.

அப்பாவு - ஓம் பிர்லா
அப்பாவு - ஓம் பிர்லா
Twitter

மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, அந்த மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தக்கூடிய செயல் என்ற கருத்து பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மேலும் தி.மு.க-மீது இருக்கும் விமர்சனத்துக்கு விடை சொல்லும் வகையில்தான், தற்போது அப்பாவு முன்வைத்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன” என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு