Published:Updated:

திருவாரூர்: ``தெற்கு ரத வீதிக்கு `கருணாநிதி' பெயரை வைக்க நினைத்தால்..!" - அண்ணாமலை கண்டனம்

பாஜக - அண்ணாமலை

``திருவாரூர் தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும்." - அண்ணாமலை

திருவாரூர்: ``தெற்கு ரத வீதிக்கு `கருணாநிதி' பெயரை வைக்க நினைத்தால்..!" - அண்ணாமலை கண்டனம்

``திருவாரூர் தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும்." - அண்ணாமலை

Published:Updated:
பாஜக - அண்ணாமலை

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, `கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்குக் கருணாநிதி பெயரைச் சூட்டுவதா என பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில்தான், தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயர் சூட்டும் முடிவைக் கைவிடக் கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆழித்தேர் ஓடும் வீதியில், `அரசியலைப் புகுத்தாதே... இந்த நாடு, இந்து நாடு' என முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக
பாஜக

இதில் கண்டன உரையாற்றிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``தமிழகத்தின் நீண்டகாலப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மாற்றுவதற்கான முயற்சியில் தி.மு.க ஈடுபட்டுவருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இரு பெரும் சாதனைகளைச் செய்துவருகிறது. அதில் ஒன்று, மத்திய அரசின் திட்டங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது. மற்றொன்று, ஊரின் பெயரை மாற்றுவது. திருவாரூர் தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும். காங்கிரஸ் கட்சி இந்த மன வியாதியில் 70 ஆண்டுக்காலமாக இருந்துவருகிறது. இதற்கு முற்றிலும் விதிவிலக்கான கட்சியாக பா.ஜனதா செயல்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஓர் ஆண்டுக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார். ஆனால் ஒரு திட்டத்துக்குக்கூட அவர் தனது பெயரை வைத்தது இல்லை. நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தித்தான் பா.ஜ.க எப்போதும் செயல்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஜக
பாஜக

தி.மு.க-வின் மன வியாதியைத் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் நிச்சயம் குணப்படுத்துவார். தமிழகத்தில் சாலை வசதி இல்லாமல் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலைப் பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் அல்லல்பட்டுவருகிறார்கள். இதே போன்று பல ஊர்கள் உள்ளதால், அங்கெல்லாம் சாலை வசதியைச் செய்து கொடுத்து அவற்றுக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்ற மாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் இந்த பிரமாண்டான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்குப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜனதா முற்றுகைப் போராட்டம் நடத்தும்.

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளிவைத்து 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். இலங்கையில் குடும்ப ஆட்சியின் காரணமாக அங்குள்ள அரசு சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததால், அங்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தற்போது குடும்ப ஆட்சி நடந்துவரும் தமிழ்நாட்டிலும் இதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, அறிவாலயம் குடும்பம், சரத் பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்துக் குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடுகட்ட நினைத்த திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பிரதமர், மக்கள் ஏழையாக இருக்கக் கூடாது, அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார். மத்திய அரசுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிற தமிழக அரசுக்கும், எந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் மத்தியில் ஓர் இளைஞரின் உயிர் பறிபோனது என்பது வேதனைக்குரியது. இந்தப் பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism