Published:Updated:

கச்சத்தீவு அஜெண்டா; திமுக-வுக்கு செக்; பாஜக-வின் பலே பிளான் - அண்ணாமலையின் இலங்கை பயணத்தின் பின்னணி

அண்ணாமலை

``இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமன் எப்படி சஞ்சீவி மலையைச் சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமக்க பாரத பிரதமர் மோடியும் தயாராகவே இருக்கிறார்.” - அண்ணாமலை

கச்சத்தீவு அஜெண்டா; திமுக-வுக்கு செக்; பாஜக-வின் பலே பிளான் - அண்ணாமலையின் இலங்கை பயணத்தின் பின்னணி

``இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமன் எப்படி சஞ்சீவி மலையைச் சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமக்க பாரத பிரதமர் மோடியும் தயாராகவே இருக்கிறார்.” - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

``இலங்கையைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கிறது. அன்று அனுமன் எப்படி சஞ்சீவி மலையைச் சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கிறார்" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இலங்கையில் பேசியிருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் மூன்றுநாள் பயணமாக இலங்கை சென்றிருக்கும் அண்ணமலை, மலையகத் தமிழ் எம்.பி-க்களின் அழைப்பின் பேரில் மட்டுமல்லாமல், வேறு சில காரணங்களுக்காகவும், அரசியல் திட்டங்களுக்காகவும் பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இலங்கையில் அண்ணாமலை
இலங்கையில் அண்ணாமலை

`டீல்' ஆன நிர்வாகிகள் பட்டியல், `இலங்கை’ கிளம்பிய அண்ணாமலை:

அண்ணாமலையின் இலங்கைப் பயணம் தொடர்பாக பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்களெல்லாம் புது ரகம். அதாவது, நீண்ட நாள்களாக இழுபறியில் கிடந்த தமிழக பா.ஜ.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. கட்சிரீதியாக மொத்தம் 60 மாவட்டங்களைக்கொண்ட பட்டியலில், சென்னை மேற்கு மாவட்டத்தைத் தவிர, மீதமுள்ள 59 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில், கட்சியில் பெரிய அளவில் செயல்படாத 26 மாவட்டத் தலைவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில், அனைத்துப் பழைய நிர்வாகிகளையும் மாற்றிவிட்டு, தனக்கு ஆதரவான புதுமுகங்களை, இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையில் திட்டமாக இருந்தது. அதற்காக, கடந்த ஆண்டே அனைத்து மாவட்டங்களுக்குமான புதிய நிர்வாகிகள் பட்டியலைத் தயார்செய்து, ஒப்புதலுக்காக பா.ஜ.க மேலிடத்துக்கு அனுப்பிவைத்தார். ஆனால் மறுபுறம் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற சீனியர் நிர்வாகிகள் பலர் `புதிய பட்டியலைத் திருத்த வேண்டும், தங்களுக்கு ஆதரவான பழைய நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்' எனக் கூறி கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துவந்தனராம். இதனால், காரணம் சொல்லப்படாமல் புதிய நிர்வாகிகள் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குவதை பா.ஜ.க மேலிடம் நிறுத்திவைத்தது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை அமைதி காத்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், அண்ணாமலை அளித்த புதிய நிர்வாகிகள் பட்டியலில், சீனியர் தலைவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு மாற்றங்கள் செய்து, திருத்தப்பட்ட பட்டியலைத் தயாரித்து, கடந்த மாதம் அதற்கு ஒப்புதலும் வழங்கி அண்ணாமலையிடம் கொடுத்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். அதேசமயம், அண்ணாமலையைச் சமாதானம் செய்யும்விதமாக, பட்டியலில் பாதிப்பேருக்கு அதாவது 26 மாவட்டத் தலைவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சமாளித்திருந்தது தலைமை. இருப்பினும், `கட்சிக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல புது ரத்தம் பாய்ச்சப்படும்' என சூளுரைத்திருந்த அண்ணாமலைக்கு இது கடும் அதிருப்தியையே கொடுத்தது.

குஜராத்தில் அண்ணாமலை
குஜராத்தில் அண்ணாமலை

இதைப் புரிந்துகொண்ட பா.ஜ.க மேலிடம், அண்ணாமலையின் அதிருப்தியைத் தணிப்பதற்காக, தமிழகம் தாண்டிய பிற பகுதிகளுக்கு அனுப்பிவைத்து, தேசிய அங்கீகாரம் வழங்கியது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி குஜராத் கர்ணாவதி தமிழ்ச்சங்கம் சார்பில் அகமதாபாத்தில் நடைபெற்ற `சித்திரைத் திருநாள்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, பெரிய வரவேற்பும் அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு, முக்கியத்துவம் வாய்ந்த தொழிலதிபர் கூட்டத்திலும் அவர் இடம்பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தெலங்கானா பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட `பிரஜா சங்க்ரம யாத்திரை' நிகழ்ச்சிப் பொதுக்கூட்டத்துக்கு அண்ணாமலை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், `அண்ணாமலை ஒரு சிங்கமலை' எனப் பாராட்டி கோஷமிட்ட தெலங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய்குமாரின் கவனிப்பும், அண்ணாமலைக்கு புத்துணர்வு டானிக்காக இருந்தது.

தெலங்கானாவில் அண்ணாமலை
தெலங்கானாவில் அண்ணாமலை

இலங்கை பயணமும் இரண்டு முக்கிய செயல்திட்டமும்:

அந்த வரிசையில், தற்போது மாநிலங்கள் கடந்து இலங்கை நாட்டுக்கும், பா.ஜ.க பிரதிநிதியாக, சிறப்பு அழைப்பாளராக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார் அண்ணாமலை. இலங்கையில் மலையகத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் நுவேராலியா மாவட்டத்தில் உள்ள சீதை அம்மன் கோயிலில் வழிபாடு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மே தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பு, இந்திய அரசாங்கம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள், மருத்துவமனைகளைப் பார்வையிடல், யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு என அண்ணாமலையின் பயணம் மேலோட்டமாகக் கண்டுகொள்ளப்பட்டாலும், இரண்டு முக்கியமான செயல்திட்டங்களை திரைமறைவில் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கையில் அண்ணாமலை
இலங்கையில் அண்ணாமலை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கட்டுமானம்:

பா.ஜ.க-வின் தாய் அமைப்பாகக் கருதப்படும் இந்தியாவின் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வெளிநாடுகளில் ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம் எனும் பெயரில் செயல்பட்டுவருகிறது. அந்தவகையில், இலங்கையிலும் ஈழத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழும் கணிசமான இடங்களில் `சேவா இன்டர்நேஷனல்' எனும் தொண்டு அமைப்பை ஆர்.எஸ்.எஸ் நடத்திவருகிறது. மேலும், உலகளாவித் தமிழர்களை ஒருங்கிணைக்கும்விதமாக `அகண்ட தமிழ் உலகம்' என்ற அமைப்பையும் இணைந்து நடத்திவருகிறது.

தற்போதையை இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் தங்கள்து அமைப்பை இன்னும் உறுதியாக இலங்கை மண்ணில் கட்டமைக்க முடியும் என அந்த அமைப்புகள் கருதுகின்றன. இந்த நிலையில், இலங்கைக்குச் சென்றிருக்கும் அண்ணாமலை சேவா இன்டர்நேஷனல், அகண்ட தமிழ் உலகம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து, அமைப்பின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சேவா இன்டர்நேஷனல் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி மகா கணேசன், `குறைந்தது ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை' அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இலங்கை பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை
இலங்கை பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை

ஈழத்தமிழர், கச்சத்தீவு மீட்பு விவகாரம்:

ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வுக்கு செக் வைக்கும்விதமாகவும், இந்தப் பயணத்தை பா.ஜ.க பயன்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு நேரடியாக உதவ, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரடியாக இலங்கைக்கு வந்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறார்.

இலங்கை - அண்ணாமலை
இலங்கை - அண்ணாமலை

மேலும், `2009 இலங்கை உள்நாட்டுப் போரின்போது, வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது இலங்கைத் தமிழர்க்கு உதவி செய்யப்போவதாகச் சொல்கிறார்கள்!" என இலங்கையில் இருந்தபடியே காட்டமாக தி.மு.க அரசை விமர்சித்து ஸ்கோர் செய்திருக்கிறார். அதேசமயம், `இந்திய அரசாங்கத்தால் இலங்கைத் தமிழர் நலன்களுக்காக கிளெங்கோன் வைத்திய சாலை, ஹட்டன் நோர்வூட் விளையாட்டு வளாகம், அடல் பிஹாரி வாஜ்பாய் செய்த உதவிகள், பிரதமர் மோடி, இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுத்த வீடுகள்' என ஒருபக்கம் தி.மு.க-வைத் தாக்கியபடியே பா.ஜ.க-வைப் புகழ்ந்துரைத்திருக்கிறார். மேலும், இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரையும் யாழ்ப்பாணச் சிறையில் சென்று சந்தித்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், கச்சத்தீவு மீட்பு விவகாரத்தைப் பற்றி இலங்கை அரசப் பிரதிநிதிகளுடன் அண்ணாமலை விவாதித்திருப்பதாக உறுதிசெய்யப்படாத தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அதாவது, ``கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டபோது தமிழகத்தில் தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல், தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளால் அரசியல் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் விவகாரமாக உள்ளது. தற்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு இந்திய அரசாங்கம், இலங்கை கேட்கும் அத்தனை உதவிகளையும் செய்துவருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கச்சத்தீவு மீட்பு விவகாரத்தை இந்திய அரசாங்கம் கையிலெடுத்துப் பேசினால் இலங்கையிடமிருந்து நிச்சயம் பாசிட்டிவ் பதில் கிடைக்கும்.

அண்ணாமலை
அண்ணாமலை

கச்சத்தீவு மீட்கப்பட்டால் தமிழக மக்களிடையே பா.ஜ.க-வின் செல்வாக்கு பன்மடங்கு உயரும், காலத்துக்கும் பா.ஜ.க-வின் பெயர் நிற்கும், அதைத் தேர்தலில் அறுவடை செய்துகொள்ளலாம். அடுத்த 2023-க்குள் கச்சத்தீவை பிரதமர் மோடி இந்தியாவுடன் இணைப்பதற்காக காய்நகர்த்திவருகிறார்! 1975 கச்சத்தீவு தாரைவார்ப்பிலும், 2009 இறுதிப்போரிலும் காங்., தி.மு.க-வின் நிலைப்பாடு கடும் விமர்சனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியிருக்கிறது. எனவேதான், இந்த இரண்டையும் பா.ஜ.க தனது அரசியல் அஸ்திரமாக கையிலெடுத்துக்கிறது" என பா.ஜ.க தரப்பிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism