Published:Updated:

டெல்லியில் பாஜக உயர்நிலைக் கூட்டம்: தமிழக பாஜக-வுக்குக் கொடுக்கப்பட்ட அட்வைஸ் என்ன?!

மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே பா.ஜ.க நின்ற தொகுதிகள், அதிக வாக்குகள் வாங்கிய தொகுதிகளில் பூத்களை வலிமைப்படுத்த இரு மாதங்களாக வேலை பார்த்துவருகிறோம்.” - வானதி சீனிவாசன்

டெல்லியில் பாஜக உயர்நிலைக் கூட்டம்: தமிழக பாஜக-வுக்குக் கொடுக்கப்பட்ட அட்வைஸ் என்ன?!

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே பா.ஜ.க நின்ற தொகுதிகள், அதிக வாக்குகள் வாங்கிய தொகுதிகளில் பூத்களை வலிமைப்படுத்த இரு மாதங்களாக வேலை பார்த்துவருகிறோம்.” - வானதி சீனிவாசன்

Published:Updated:
மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தற்போதே ஆயத்தமாகிவருகின்றன. அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்து பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடரவும், எதிர்க்கட்சிகளை வீழ்த்தவும் பா.ஜ.க-வியூகம் வகுத்துவருகிறது. அதோடு அடுத்த ஆண்டு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், திரிபுரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெறும், இந்த மாநிலத் தேர்தல்கள் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதால், இந்தத் தேர்தல்களிலும் வெற்றிபெற பா.ஜ.க காய்களை நகர்த்திவருகிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனைத் தொடர்புகொண்டோம். “தேசிய அளவிளான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத் தலைவர்கள், அமைப்புச் செயலாளர்கள், தேசிய நிர்வாகிகள், அணித் தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படித் தயாராவது, அதற்கு முன்பு வரும் மாநிலத் தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களில், கட்சித் தேர்தலுக்கு எவ்வாறு ஆயத்தமாகிறது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

நாடு முழுவதும் கடந்த இரு மாதங்களில் 160 நாடாளுமன்றத் தொகுதிகள் தேர்வுசெய்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பூத்திலும் அங்கிருக்கும் மக்களோடு நேரடியாக கலந்துகொள்வது, அவர்களைக் கட்சியோடு வைத்திருப்பது எனப் பல்வேறு பணிகளை வெற்றிகரமாகச் செய்துவருகிறோம். அந்த ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே பா.ஜ.க நின்ற தொகுதிகள், அதிக வாக்குகள் வாங்கிய தொகுதிகளின் பூத்களை வலிமைப்படுத்த இரு மாதங்களாக வேலை பார்த்துவருகிறோம். அதன் ரிப்போர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.