Published:Updated:

`எமர்ஜென்சி,தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்கிறார் ஸ்டாலின்... ராகுல் ஒப்புக்கொள்கிறாரா?! - அண்ணாமலை

அண்ணாமலை

`உங்களில் ஒருவன்’ புத்தகத்தில், `இந்திரா காந்தியின் காலகட்டம் இருண்ட சரித்திரம்' என ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதை ராகுல் ஒப்புக்கொள்கிறாரா? - அண்ணாமலை.

`எமர்ஜென்சி,தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்கிறார் ஸ்டாலின்... ராகுல் ஒப்புக்கொள்கிறாரா?! - அண்ணாமலை

`உங்களில் ஒருவன்’ புத்தகத்தில், `இந்திரா காந்தியின் காலகட்டம் இருண்ட சரித்திரம்' என ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதை ராகுல் ஒப்புக்கொள்கிறாரா? - அண்ணாமலை.

Published:Updated:
அண்ணாமலை

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள `உங்களில் ஒருவன்- தன்வரலாறு பாகம் 1' எனும் புத்தகத்தின் நூல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 'உங்களில் ஒருவன்' நூலை வெளியிட, ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, `உங்களில் ஒருவன்’ புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டது குறித்து விமர்சித்திருக்கிறார்.

`உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
`உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

அப்போது பேசிய அண்ணாமலை, "இந்திரா காந்தியின் காலகட்டத்தை இருண்ட சரித்திரம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களோ என்கிற சந்தேகம்கூட எனக்கு எழுகிறது. நிச்சயமாக எமெர்ஜென்சி என்பது இந்தியாவினுடைய இருண்ட காலம்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்தப் புத்தகத்தை வெளியிட்டுவிட்டு புத்தகத்தில் இருந்த அந்தக் கருத்துக்கு எந்தவொரு பதில் கருத்தையும் ராகுல் காந்தி சொல்லாத காரணத்தால், அவர் அந்தக் கருத்தை ஒத்துக்கொள்கிறாரோ என்கிற எனக்கு எனக்கு எழுகிறது" எனப் பேசினார்.

முன்னதாக ட்விட்டரில் அண்ணாமலை, `முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி அவர்கள் இதைச் செய்தார்!

அவருடைய பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! திமுக - காங்கிரஸ் கூட்டணியைப்போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்...’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism