Published:Updated:

``நாட்டுக்கு விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுதந்த உத்தம தாயார் மறைவு!" - அண்ணாமலை இரங்கல்

அண்ணாமலை

``அரசு இல்லத்துக்குச் செல்ல உரிமை இருந்தும் செல்ல விரும்பாமல், தன் அன்பு இல்லத்தில் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்துவந்த இந்த வரலாற்றுத் தாயை வணங்குகிறேன்." - அண்ணாமலை

``நாட்டுக்கு விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுதந்த உத்தம தாயார் மறைவு!" - அண்ணாமலை இரங்கல்

``அரசு இல்லத்துக்குச் செல்ல உரிமை இருந்தும் செல்ல விரும்பாமல், தன் அன்பு இல்லத்தில் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்துவந்த இந்த வரலாற்றுத் தாயை வணங்குகிறேன்." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக் குறைவால் அகமதாபாத்திலுள்ள யூ.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அதைத் தொடர்ந்து, குஜராத்தின் காந்தி நகரின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு ஆறுதலும், அவர் தாயார் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் திடீர் மறைவுச் செய்தி பேரிழப்பாகும். ஹீராபென் என்றால் `வைர மங்கை' என்று பொருள். நாட்டுக்கு ஒரு தன்னிகரில்லா, விலைமதிப்பற்ற வைரத்தைப் பெற்றுத் தந்திருக்கும் அந்த உத்தம தாயாரின், உயிர் பிரிந்த செய்தி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி

இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையை, பிரதமர் மோடிக்கு இறைவன் அருளட்டும். அன்னையைத் தவிர பெருந்தெய்வம் வேறேதுமில்லை என்று ஆகமங்கள் கூறுகின்றன. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மாதா, பிதா, குரு, தெய்வம் என அன்னையை தெய்வத்துக்கு இணையாக வலியுறுத்துவது, நம் பண்பாடு.

`முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டுவேன்

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே என அழைத்த வாய்க்கு…’

என்று தாயார் இறந்தவுடன் கதறிப் புலம்புகிறார்… பற்றெல்லாம் துறந்த பட்டினத்தடிகள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

`I say that there is nothing greater than the mother of a man'... Walt whitman என்ற அமெரிக்க கவிஞர் கூறியதைத் தன் அன்னையின் பாதங்களுக்கு எழுதிய கவிதை நூல் முகப்பில் பிரதமர் குறிப்பிடுகிறார். அன்னையின்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால், ஏராளமான வேலைப் பணிகளின் பளு எதிர்வரினும் தாயாரைச் சென்று சந்தித்து அவர் ஆசி பெற்றுவருவதை பிரதமர் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

இறுதிச்சடங்கில் மோடி
இறுதிச்சடங்கில் மோடி
ட்விட்டர்

தன் அன்னையை சக்தியின் வடிவமாகக் கருதி, அன்னையின் திருவடிகளுக்கு என்று அவர் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு மிகப் பிரபலம்.

தாயே உன் ஆசியினால் எதுவும் சாத்தியமாகும்

உன் உயிரோட்டத்தை எனக்குள் உணரச் செய்தவளே…

பிளக்கும் இதயத்தின் வேதனை சாதாரணமானதல்ல

அவசியம் நீ எனக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்துகிறாய்

ஆனால் தாயே ஒரு பாமர மனிதன்

சாதாரணமான எனக்கு உன் சமிக்ஞை புரியவில்லை

எதற்காக எனக்கு இந்த இதய வலி

இது எதிர்பார்க்கப்பட்டது என்றாலும்...

வலிகள்...., வலிகள்தானே

சரி தாயே நீ என்னை வருத்துவது என்று முடிவு செய்துவிட்டாய்....

சகிப்புத்தன்மையைத் தாங்கும் சக்தியை எனக்கு பயிற்சி கொடுக்கிறாய்

தாயே உன் அருளை நான் நம்புகிறேன்

தாயே அதுவரை உன் கைகளில் என்னை ஒப்படைப்பதைவிட என்னால் வேறு என்ன செய்ய முடியும்...

(`அன்னையின் திருவடிகளுக்கு' மோடியின் கவிதை - 24.12.1986)

அண்ணாமலை
அண்ணாமலை

தன் மகன் நாட்டின் தலைவனாக வாழும்போது, தன் வயது முதிர்ந்த காலத்திலும், மகனின் அரசு இல்லத்துக்குச் செல்ல உரிமை இருந்தும் செல்ல விரும்பாமல், தன் அன்பு இல்லத்தில் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்துவந்த இந்த வரலாற்றுத் தாயை வணங்குகிறேன்.

தமிழக பா.ஜ.க-வின் மாநிலப் பொறுப்பாளர்கள் சார்பிலும், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்கள், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிப் பிரிவு தலைவர்கள், அனைத்து உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.