Published:Updated:

`நெட்ஃப்ளிக்ஸில் என்ன பார்ப்பது?'- கார்த்தி சிதம்பரம் ட்வீட்; அண்ணாமலையின் பதில்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்வீட்டை முன்வைத்து 'நீங்கள் என்ன படம் பரிந்துரை செய்வீர்கள்?' எனக் கேட்டிருந்தோம். அதற்கு அவர் அளித்த பதில்...

`நெட்ஃப்ளிக்ஸில் என்ன பார்ப்பது?'- கார்த்தி சிதம்பரம் ட்வீட்; அண்ணாமலையின் பதில்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ட்வீட்டை முன்வைத்து 'நீங்கள் என்ன படம் பரிந்துரை செய்வீர்கள்?' எனக் கேட்டிருந்தோம். அதற்கு அவர் அளித்த பதில்...

Published:Updated:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பதாகவும் காங்கிரஸ் மிகக் குறைவான இடங்களிலேயே முன்னிலையைப் பதிவு செய்வதாகவும் தேர்தல் நிலவரங்கள் பரபரப்பாக வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'நெட்ஃப்ளிக்ஸ்-ல் தற்போது என்ன பார்க்கலாம்?' எனப் பரிந்துரை கேட்டு ட்வீட் செய்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்
பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்

விகடன் தேர்தல் முடிவுகள் குறித்த விவாதம் யூ-டியூப் லைவ்வில் தொடர்ச்சியாக காலை முதல் வெளியாகி கொண்டிருந்தது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நமது அரங்கிற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் இந்த ட்விட்டை முன்வைத்து 'நீங்கள் என்ன படம் பரிந்துரை செய்வீர்கள்' எனக் கேட்டிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு அவர் அளித்த பதில், "நல்ல படமாக பார்க்கட்டுமே. எதுவாக இருந்தாலும் அரசியல் எல்லாம் தாண்டி ஒரு கட்சி கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது மாண்புக்கு சரியாக இருக்காது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பப்ம், காங்கிரஸ் கட்சியைத் தாக்குகிறோமே தவிர அதன் தலைவர்களைத் தனி மனிதர்களைத் தாக்குவதில்லை. அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். நாளையில் இருந்து மக்களுக்கு பணி செய்யத் தொடங்கட்டும்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism