Published:Updated:

``உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்'' - பாஜக மாவட்ட தலைவர் கைது குறித்து அண்ணாமலை

அண்ணாமலை

``திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களின் சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்'' - அண்ணாமலை

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து மதம் குறித்துப் பேசியது, பா.ஜ.க-வினரை கோபமடையச் செய்திருக்கிறது. ஆ.ராசா மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, `நாங்கள் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல, இந்து மதம் என்ற பெயரில் சொல்லப்படும் சனாதனத்துக்கு தான் நாங்கள் எதிரிகள், சனாதனத்தை வீழ்த்தாத வரை அரசியல் சட்டம் வாழாது. அனைவரும் ஒன்றிணைந்து சனாதனத்தை ஒழிப்போம்’ என ஆ.ராசா விளக்கமளித்திருந்தார்.

ராசா
ராசா
விகடன்

இந்தநிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது, ``தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரின் இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்'' என பதிவிட்டிருக்கிறார்.