Published:Updated:

``கோபாலபுர குடும்பத்தின் ஊழல்கள், சொத்துகள் குறித்து வெளியிட வெப்சைட் ரெடி!" - அண்ணாமலை

அண்ணாமலை

``முதல்வர் குறித்துப் பேசக்கூடிய தைரியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து பெரிதா... வாட்ச் விவகாரம் பெரிதா என தெரிந்துவிடும்." - அண்ணாமலை

``கோபாலபுர குடும்பத்தின் ஊழல்கள், சொத்துகள் குறித்து வெளியிட வெப்சைட் ரெடி!" - அண்ணாமலை

``முதல்வர் குறித்துப் பேசக்கூடிய தைரியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து பெரிதா... வாட்ச் விவகாரம் பெரிதா என தெரிந்துவிடும்." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க சார்பில், 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா இன்று காலை 11:30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள், கட்சியினர் உட்பட அனைவரும் காலை 10:30 மணியளவில் அங்கு வந்துவிட்டனர். ஆனால், 12:40 மணியாகியும் அண்ணாமலை வரவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சோர்வடைந்து வாடினர். அண்ணாமலையை வரவேற்க மண்டபத்தின் முன்பு காத்திருந்த பெண்களும் வெயிலில் நிற்க முடியாமல், 'சும்மா அங்க போங்க, இங்க போங்கனு சொல்லாதீங்க. வெயில்ல நிக்க முடியல. அவர் வந்தா மட்டும் சொல்லுங்க' எனக் கூறி மண்டபத்துக்குள்ளே வந்துவிட்டனர். பின்னர் மதியம் 1 மணிக்கு மேல் வந்த அண்ணாமலை, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, பா.ஜ.க-வுக்கு எப்போதும் இல்லாத எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 25 எம்.பி-க்களை பெற உழைக்கிறோம். ரஃபேல் வாட்ச்சை வைத்தே 25 எம்.பி-க்களை பெற்றுவிடலாம் என நினைக்கிறேன். இத்தனை நாள் ஊழலைப்பற்றிப் பேச வாய்ப்பு இல்லாமல் இருந்தது. வாட்ச் பில் என்னிடம்தான் இருக்கிறது. என்றைக்கு இந்த வாட்ச் குறித்து, டீக்கடையில் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன். கருணாநிதி இருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்திருக்க மாட்டார். இந்த வாட்ச் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய பங்காற்றும். எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறார்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இப்போது சில அமைச்சர்கள்தான் வாட்ச் குறித்து பேசுகிறார்கள். எல்லா அமைச்சர்களும் இது குறித்துப் பேசுங்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

வாட்ச் பில் வெளியிடப்படும் அன்றைய தினம் ஒரு வெப்சைட் தொடங்கவிருக்கிறோம். அதில் கோபாலபுர குடும்பம், அனைத்து அமைச்சர்களின் ஊழல்கள், சொத்துகள், பினாமி விவரங்களை வெளியிடுவோம். ஒரே நாளில் அரசியல் புரட்சி ஏற்படுத்தவிருக்கிறோம். முதல்வர் குறித்துப் பேசக்கூடிய தைரியம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து பெரிதா... வாட்ச் விவகாரம் பெரிதா என தெரிந்துவிடும். அதுமட்டுமல்லாமல், ஒரு அமைச்சருக்கு இந்தோனேசியாவில் தனியாக ஒரு துறைமுகமே இருக்கிறது. தி.மு.க பெரிய தட்டில் லட்டு போல இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்திருக்கின்றனர். எத்தனை காலம் தி.மு.க ஆட்சியைப் பொறுத்துக் கொள்ளமுடியும். 2024 தேர்தலில் 25 எம்.பி-க்களை பெற்று, தி.மு.க-வுக்கு முடிவுரை எழுதுவோம். எந்த பொறி வைத்தால் எந்த எலி வரும் என நமக்குத் தெரியும்" என்று கூறினார்.