Published:Updated:

ஆ.ராசாவின் இந்து மதம் குறித்தப் பேச்சு... அண்ணாமலை கண்டனம்!

அண்ணாமலை

ஆ.ராசாவின் பேச்சுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து விமர்சித்திருக்கிறார்.

ஆ.ராசாவின் இந்து மதம் குறித்தப் பேச்சு... அண்ணாமலை கண்டனம்!

ஆ.ராசாவின் பேச்சுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
அண்ணாமலை

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அண்மையில் இந்து மதம் குறித்துப் பேசியது, பா.ஜ.க-வினரை கொதிப்படையச் செய்திருக்கிறது. நாமக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஆ.ராசா, `` `நீ கிறித்தவனாக இல்லையென்றால், நீ இஸ்லாமியனாக இல்லையென்றால், நீ பாரசீகனாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்கவேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது" எனக் குறிப்பிட்டு மேலும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

ஆ.ராசா
ஆ.ராசா

இந்த நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து விமர்சித்திருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

ட்விட்டரில் ஆ.ராசா பேசிய வீடியோவைப் பதிவிட்டு விமர்சித்த அண்ணாமலை, ``மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, தி.மு.க எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வீசியிருக்கிறார். தமிழ்நாடு தங்களுக்குத்தான் சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிஷ்டவசமானது" என தி.மு.க-வையும், அதன் தலைவர்களையும் விமர்சித்திருக்கிறார்.