நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக பா.ஜ.க-வின் தலைவர் பொறுப்பு நிரப்பப்பட்டுள்ளது. புதிய தலைவராகப் பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ‘பா.ஜ.க-வின் வியூகம் என்ன? எல்.முருகனுக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட் என்ன?’ உள்ளிட்ட கேள்விகளுடன் கமலாலயத்தை வட்டமடித்தோம்.

தமிழக பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க, 188 தொகுதிகளில் போட்டியிட்டு 2.86 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கொளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றோம். 32 தொகுதிகளில் மூன்றாவது இடம் கிடைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்தபோதே, பா.ஜ.க-வுக்கு 12.28 லட்சம் வாக்குகள் கிடைத்தன. இப்போது இந்த வாக்கு சதவிகிதம் கூடியிருப்பதாகக் கருதுகிறோம்.

2016 தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்ட தொகுதிகளில் 10,000 வாக்குகளைத் தாண்டிய தொகுதிகளை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து ‘ஏ கிளாஸ்’ தொகுதிகளாக வகைப்படுத்தியுள்ளோம். வேதாரண்யம், ஓசூர், கவுண்டம்பாளையம், விருகம்பாக்கம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், ஆலந்தூர், சூலூர், தென்காசி, மயிலாப்பூர், ராதாபுரம் என... 20 தொகுதிகள் இந்த ‘ஏ கிளாஸ்’ பட்டியலுக்குள் வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக 5,000 வாக்கு களுக்கு மேல் பெற்ற 12 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இரண்டின்மீது மட்டும் கவனம் செலுத்துமாறு பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. கூட்டணி இல்லாமல் தனியாகப் போட்டியிட்டாலும்கூட, 50 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற வேண்டும் என்பதே எங்கள் திட்டம்.

பட்டியலினத் துறவி

சகஜானந்தருக்குத் தபால்தலை

2016 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்குக் கவுண்டர் சமூகத்தினர் பேராதரவு அளித்தனர். இந்தச் சமூகத்துக்கு அடுத்தபடியாக, பட்டியலின சமூகத்தினர் கொங்கு மண்டலத்தில் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு அரசியல் அரங்கில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களை பா.ஜ.க-வுக்குள் கொண்டுவருவதே எங்கள் பிரதான திட்டம். எல்.முருகனை பா.ஜ.க தலைவராக நியமிக்கும் முன்னதாக அவரை அழைத்த தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ‘எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டத்தைத் தேவேந்திர குல வேளாளர்கள் முன்னெடுத்துள்ளனர். அதில் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தில் பட்டியலின வாக்குகள் 20 சதவிகிதம் உள்ளன. பெரும்பாலும் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு மட்டுமே இந்த வாக்குகள் பிரிந்து சென்றுள்ளன. இதை முதலில் உடைக்க வேண்டும்.

பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்களைத் தீவிரமாகப் பிரசாரம் செய்ய வேண்டும்’ என்றுள்ளார்.

இதையொட்டி, சிதம்பரத்தைச் சேர்ந்த பட்டியலினத் துறவி சகஜானந்தருக்குத் தபால்தலை வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுவருகிறது” என்றனர்.

தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் மூலமாகப் பட்டியலின வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கும் இந்தத் திட்டத்தில் முக்கியமான ரோல் இருக்கப்போகிறதாம்.

வியூகம் வெற்றிபெறுமா?