Published:Updated:

"மாநில அரசின் கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்"-ஸ்டாலின்

ஸ்டாலின்

``நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காகப் போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருக்கிறது.'' - முதல்வர் ஸ்டாலின்

"மாநில அரசின் கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்"-ஸ்டாலின்

``நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காகப் போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருக்கிறது.'' - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், ``நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருக்கிறது. மாணவர்களின் எண்ணிக்கை உயரும்போது கல்வியின் தரம் குறைகிறது என்கிற வாதத்தை ஏற்க மாட்டேன். தொழில் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து அதை எதிர்க்கவில்லை, அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்ற காரணத்தால்தான் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதி இருந்தால்தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி, அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்பதால் இதை எதிர்க்கிறோம். கல்வியால் முன்னேறிய சமூகம் நாம் என்பதால் இதை எதிர்க்கிறோம். புதிய பாடங்கள், படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களை கற்க வேண்டும்'' என்றார்.