Published:Updated:

``பேனர் வைக்கத்தான் தடை; கொடிக்கம்பம் வைக்க அல்ல!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ( எம்.விஜயகுமார் )

`நீதிமன்றம் சாலையோரத்தில் பேனர்கள் வைக்கத்தான் தடை விதித்திருக்கிறது. கொடிக்கம்பம் வைக்கத் தடை விதிக்கவில்லை' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Published:Updated:

``பேனர் வைக்கத்தான் தடை; கொடிக்கம்பம் வைக்க அல்ல!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`நீதிமன்றம் சாலையோரத்தில் பேனர்கள் வைக்கத்தான் தடை விதித்திருக்கிறது. கொடிக்கம்பம் வைக்கத் தடை விதிக்கவில்லை' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி ( எம்.விஜயகுமார் )

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ``அ.ம.மு.க பதிவு செய்யாத ஒரு கட்சி. அக்கட்சியிலிருந்து விலகி பலரும் அ.தி.மு.கவில் சேர்ந்து வருகிறார்கள். தினகரன் எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் பல கட்சிகளுக்குத் தூது விட்டுக் கொண்டிருக்கிறார். எங்கள் கட்சிக்கும் தூது விட்டார். அவரை நாங்கள் சேர்த்துக் கொள்ள முடியாது.

தினகரன்
தினகரன்

ஹெல்மெட் சோதனையில் ஒரு பெண் உயிரிழந்திருப்பதைப் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவினால் ஹெல்மெட் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்குப் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். காவலர்கள் சோதனைக்காக நிறுத்தும் போது ஓரமாக வாகனத்தை நிறுத்தி அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

நீதிமன்றம் சாலையோரத்தில் பேனர்கள் வைக்கத்தான் தடை விதித்திருக்கிறது. கொடிக்கம்பம் வைக்கத் தடை விதிக்கவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில், `மோடி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்' என்று கூறியதில் எந்தத் தவறும் இல்லை. இந்திய நாட்டின் பிரதமராக மோடி இருப்பதால், அவர் அப்படிக் கூறி இருக்கிறார். பருவநிலை மாற்றத்தால் காற்று மாசுபட்டுள்ளது. அந்தப் பாதிப்பு தமிழகத்தில் இல்லை. அதை வருவாய்த்துறை அமைச்சர் ஊடகங்களில் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே சாலை விரிவுபடுத்துவதற்காக அரசு திட்டங்களை வகுக்கிறது. 8 வழிச் சாலை போன்ற புதிய வழிச் சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்த முடியவில்லை. நிலங்களைக் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சில அரசியல் கட்சிகள் அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அதனால், சாலைகள் மாட்டுமல்ல மின்சார டவர் லைன் செல்லுவதற்குக் கூட நிலங்கள் கையகப்படுத்த முடியவில்லை'' என்றார்.