Published:Updated:

``தேர்தலைக் காரணம்காட்டி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருந்தது யார்..?!" - முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின்

`சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழி போடுவது யார் என மக்களுக்குத் தெரியும்.' - முதல்வர் ஸ்டாலின்

``தேர்தலைக் காரணம்காட்டி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருந்தது யார்..?!" - முதல்வர் ஸ்டாலின்

`சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழி போடுவது யார் என மக்களுக்குத் தெரியும்.' - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
ஸ்டாலின்

பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மோடி குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அவர், ``மத்திய அரசு, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கக் கோரிக்கை வைத்தோம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை. அதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக வாட் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமரின் இந்த பேச்சு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ``பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தமிழக அரசு வரியைக் குறைக்கவில்லை எனப் பிரதமர் கூறுகிறார். 

பெட்ரோல்
பெட்ரோல்

ஆனால், சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழி போடுவது யார் என மக்களுக்குத் தெரியும். கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியிருக்கிறது. பெட்ரோல் விலையைக் குறைப்பது தொடர்பாக யார் யாரை ஏமாற்றினார்கள் என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" எனப் பேசினார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ``பிரதமர் கூறுவதற்கு முன்பே தமிழகத்தில் எரிபொருள் விலையை முதல்வர் குறைத்துவிட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.

மத்திய அரசுதான் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. 2014 முதல் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 200 சதவிகிதத்துக்கும் மேல் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism