Published:Updated:

`சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்' - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் கடிதம்

நீதிபதிகள் நியமனம், உச்ச நீதிமன்ற கிளை அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமர் மோடி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

`சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்' - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நீதிபதிகள் நியமனம், உச்ச நீதிமன்ற கிளை அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமர் மோடி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், ``உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பததில் சமூக நீதியை பின்பற்றவேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர கிளைகளை புது டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டாட்சி கட்டமைப்பு இந்திய அரசியலமைப்பின் அடித்தளம். நீதித்துறை நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத் தன்மையோடு அமைய வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி
முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி

சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நவீன மொழியாகவும், செம்மொழியாகவும் உள்ள தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும்.

தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை ஆங்கிலத்துடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை நிச்சயம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism