Published:Updated:

``இலங்கை மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டிய தருணமிது!" - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு உதவ ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, `மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கோரி, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்ததையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு அனுமதியளித்திருந்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், `இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்க வேண்டும்’ என்று தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்க வேண்டும். நல்லெண்ணம்கொண்ட அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டிய தருணம் இது. மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக அனுப்பிவைக்கப்படும்" என்று கூறி, நன்கொடை அனுப்பவேண்டிய விபரங்களையும் வெளியிட்டார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

மேலும், முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவோர், 80-G-ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

download
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism