Published:Updated:

காவிரியில் கரைபுரண்டோடும் பெருவெள்ளம் - ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

காவிரி வெள்ளம் - முதல்வர் ஆலோசனை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

காவிரியில் கரைபுரண்டோடும் பெருவெள்ளம் - ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களிடம் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

Published:Updated:
காவிரி வெள்ளம் - முதல்வர் ஆலோசனை

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகக் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியாற்றின் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவுக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2.20 லட்சம் கன அடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாங்கள் தீவிரமாகச் செய்துவருகின்றன. காவிரியில் வெள்ளப்பெருக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து திருச்சி, சேலம், கரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ``காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கரையோர மாவட்டங்கள் பாதிக்கப்படும். மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கன்னியாகுமரியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையில் இரண்டு குழுவும், திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் விரைந்து திருச்சி, ஈரோடு, நாமக்கல்லுக்குச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளம்
காவிரி ஆற்றில் வெள்ளம்

மேட்டூர், வைகை அணைகளில் அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், கரையோர மக்களின் பாதுகாப்புக்காகக் கரையோரங்களில் வசிக்கும் 21.87 மக்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. வெள்ளத்தினால் பயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல்களை துறைசார் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாடு மையம் கூடுதல் அலுவலகர்களுடன் 24 மணி நேரமும் இயங்கிவருகிறது.

பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் `1070', மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் `1077' என்ற கட்டணமில்லாத தொலைப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் `94458 69848' என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொதுமக்களுக்கு அறிவிப்பு தராமல் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது.

காவிரி ஆற்றில் வெள்ளம்
காவிரி ஆற்றில் வெள்ளம்

அதிலும், இரவு நேரங்களில் கண்டிப்பாகத் தண்ணீரின் அளவை அதிகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க வேண்டும். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர், உணவு, குழந்தைகளுக்குப் பால் போன்ற அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

வெள்ளபாதிப்பு உள்ள பகுதிகளில் தேவையான நிவாரண பணிகள், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவேண்டும். அரசு அலுவலர்கள் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவிரி ஆற்றில் வெள்ளம்
காவிரி ஆற்றில் வெள்ளம்

முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அமைச்சர்கள் வெள்ளபாதிப்பு பகுதிகளுக்குச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களும் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு விரைந்து வருகிறார்கள்.