Published:Updated:

``டெல்லி பள்ளிகளைப்போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும்!" - முதல்வர் ஸ்டாலின்

அரவிந்த் கெஜ்ரிவால் - ஸ்டாலின் ( ட்விட்டர் )

`நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். டெல்லியிலிருக்கும் மாதிரிப் பள்ளியைப்போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும்.' - ஸ்டாலின்

``டெல்லி பள்ளிகளைப்போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும்!" - முதல்வர் ஸ்டாலின்

`நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். டெல்லியிலிருக்கும் மாதிரிப் பள்ளியைப்போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும்.' - ஸ்டாலின்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால் - ஸ்டாலின் ( ட்விட்டர் )

தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலகத் திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது அவரை வரவேற்கும்விதமாகத் தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு டெல்லியில் உள்ள பள்ளிகளின் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விளக்கிக் கூறினார்கள். மேலும் கல்வி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பின்போது, விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் - ஸ்டாலின்
அரவிந்த் கெஜ்ரிவால் - ஸ்டாலின்
ட்விட்டர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வருடனான தனது சந்திப்பு தொடர்பாக ட்விட்டரில், ``கல்வி மட்டுமே சிறந்த சமுதாயத்தையும், சக்திவாய்ந்த நாட்டையும் உருவாக்க உதவும். நாடு முழுவதும் கல்விப் புரட்சியை ஏற்படுத்துவோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்த்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். டெல்லியில் இருக்கும் மாதிரிப் பள்ளியைப்போல தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்படும். அப்படி தமிழகத்திலும் பள்ளிகள் உருவாக்கப்பட்ட பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களின் சார்பில் வரவேற்கவிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism