Published:Updated:

``திராவிட மாடல் ஆட்சி; வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் அரசு!"- மு.க. ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

"வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் மக்களின் அரசாக இது இருக்கும். இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி" - மு.க. ஸ்டாலின்

``திராவிட மாடல் ஆட்சி; வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் அரசு!"- மு.க. ஸ்டாலின்

"வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் மக்களின் அரசாக இது இருக்கும். இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி" - மு.க. ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், தி.மு.க தலைமையிலான கூட்டணி 69.3% இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான வெற்றி என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி

தமிழ்நாட்டில் நம்முடைய அணி தொடர் வெற்றியைப் பெறுவதற்குக் காரணம் இந்த ஒற்றுமை உணர்வுதான். நமது அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்பதை முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் சொல்லி வருகிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் நன்மை செய்யும் மக்களின் அரசாக இது இருக்கும். இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி. அத்தகைய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளை கைப்பற்றியதன் மூலமாக தமிழ்நாட்டையே முழுமையாக வென்றுள்ளது கழகக் கூட்டணி. எதிர்க்கட்சிகளை முழுமையாக மக்கள் நிராகரித்துள்ளார்கள். மக்கள் எந்நாளும் உதயசூரியனைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதைக் காட்டி விட்டார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக நேரடியாக வந்து தேர்தல் பரப்புரை செய்ய இயலவில்லை. வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism