Published:Updated:

``இது நம்ம போலீஸ் என்ற உணர்வை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கிறோம்" - ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

`தி.மு.க ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் எழவில்லை, சாதிச் சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை.' - முதல்வர் ஸ்டாலின்.

``இது நம்ம போலீஸ் என்ற உணர்வை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கிறோம்" - ஸ்டாலின்!

`தி.மு.க ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் எழவில்லை, சாதிச் சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை.' - முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், ``கடந்த ஓராண்டில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது. காவல்துறையினர் சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். தி.மு.க ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் எழவில்லை, சாதிச் சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை. காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் கொள்கை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடக்காமல் பாத்துக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம்தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. எங்கோ ஒரு காவலர் செய்யும் தவறு, இங்கு ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். அந்தக் காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சியின் மீதுதான் கறை படியும். காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் தங்களது பணியைச் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பாதுகாப்புப் பணியில் காவல்துறை
பாதுகாப்புப் பணியில் காவல்துறை

திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மோதல்களை ஏற்படுத்துவோரை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்த போதைப்பொருள் நடமாட்டமும் தமிழகத்தில் இருக்கக் கூடாது. மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனைவருக்குமான திராவிட மாடல் வளர்ச்சியின் அடித்தளமாக சமூக நல்லிணக்கம், சமூகநீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை வடிவமைக்கபட்டிருக்கின்றன. எனது கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை பொறுப்புடன் செயல்படும்.

பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்

விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக் கூடாது. `இது நம்ம போலீஸ்’ என்ற உணர்வை பட்டித்தொட்டியில் உள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கிறோம். ஆளுங்கட்சி உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக அளவில் பேச வாய்ப்பு தரப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எனக்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism