Published:Updated:

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வீரவேலுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்திருக்கிறார்.

 தமிழ்நாடு மீனவர்கள்
தமிழ்நாடு மீனவர்கள்

அதைத் தொடர்ந்து இந்திய கடற்படையின் இத்தகையச் செயலை, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த வீரவேலுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், இந்திய கடற்படையின் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
twitter

அந்த கடிதத்தில், ``இந்திய கடற்படையினரின் இத்தகைய இயல் மிகுந்த வருத்தத்துக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் நிதானத்துடன் கையாள பிரதமர் அறிவுரை வழங்கவேண்டும்" என ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.