Published:Updated:

நாகூர் : `ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 நிவாரணம் வேண்டும்!’ - ஆய்வுக்கு வந்த முதல்வரிடம் கோரிக்கை

நாகூர்
நாகூர்

இந்த தர்காவுக்கு, தான் சிறுவயதில் வந்ததாகக் குறிப்பிட்ட முதல்வர், `உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உறுதியளித்தார்.

நிவர் மற்றும் புரெவி புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகை தொகுதிக்கு வருகைதந்தார்.

நாகூர்
நாகூர்

காலையில் முதல் விசிட்டாக நாகூர் தர்காவுக்கு வந்த முதல்வரை, நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் தர்ஹா நிர்வாகத்தினரும் வரவேற்றனர்.

பிறகு முதல்வருடன வந்த அமைச்சர்கள் வேலுமணி, மணியன், விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் தர்கா நிர்வாகத்தினர் பாரம்பர்ய மரியாதையும் வரவேற்பும் அளித்தனர். இந்த தர்காவுக்கு, தான் சிறுவயதில் வந்ததாகக் குறிப்பிட்டார் முதல்வர்.

நாகூர்: தொடர் கனமழை... சமீபத்தில் கட்டப்பட்ட தர்கா குளம் சுற்றுச்சுவர் சரிந்தது!

பின்னர் முதல்வர் கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தர்கா குளத்தைப் பார்வையிட்டார். அப்போது தமிமுன் அன்சாரி, `இந்தக் குளத்தைப் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து மறுசீரமைப்பு செய்து கொடுக்குமாறு’ முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.

`இதை கவனத்தில்கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார் முதல்வர்.

நாகூர்
நாகூர்

பின்னர், நாகை மற்றும் நாகூர் கடற்கரைப் பகுதிகளைச் சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்குமாறும், மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 இழப்பீடு தர வேண்டும் என்றும், மழையில் பாதித்த வீடுகளுக்கு தலா ரூ.20,000 இழப்பீடு வழங்கப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார் தமிமுன் அன்சாரி.

அதோடு, நம்பியார் நகரில் மீன்பிடி இறங்கு தளத்துக்கு, சுற்றுசூழல் அனுமதி பெற்றுக் கொடுத்ததற்காக நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். முதல்வருக்கு டாக்டர்  ஹபீப் முகம்மது எழுதிய `வேதவரிகளும், தூதர் மொழிகளும்’ என்ற நூலையும், `விவேகானந்தரின் பொன்மொழிகள்’ என்ற நூலையும் தமிமுன் அன்சாரி பரிசளித்தார்.

தர்கா வாசலில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு