Published:Updated:

`சீனாவின் துயரம் மஞ்சள் நதி;இந்தியாவின் துயரம் இந்த ஆட்சி!' - கே.எஸ்.அழகிரி

கா.முரளி

பா.ஜ.க-வின் 5 ஆண்டுகால ஆட்சி என்பது இந்தியாவின் துயரமாகும். சீனாவின் துயரம் எப்படி மஞ்சள் நதியோ, அதேபோன்று இந்தியாவின் துயரம் பா.ஜ.க ஆட்சி.

KS Alagiri
KS Alagiri ( கா.முரளி )

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில், காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும், செங்கம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏரி தூர் வாரப்பட்டுவருவதைப் பார்வையிடுவதற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலை வந்தார்.

KS Alagiri
KS Alagiri
கா.முரளி

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,``பா.ஜ.க ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தொழிற்சாலையான அசோக் லேலாண்ட் நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தங்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. வாகன உற்பத்தித் துறையில் மட்டும் இதுவரை 3.5 லட்சம் வேலைவாய்ப்புகளை நாம் இழந்திருக்கிறோம். அதேபோல், பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா, 10 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இப்படி பல நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை, விற்பனையை செய்ய முடியாமல் தவித்துவருகிறது. விவசாய வளர்ச்சியும் குறைந்துவிட்டது. ஜி.டி.பி வளர்ச்சியும் 4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

`காஷ்மீர் முதல் பொருளாதாரம் வரை..' மோடி ஆட்சியின் 100 நாள்கள்! -  நிர்மலா சீதாராமன் விளக்கம்

தற்போது, இந்தியாவில் பொருளாதார சுனாமி ஒன்று உருவாகியுள்ளது. அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் முழித்துவருகிறது மத்திய அரசு.

வாகன உற்பத்தித்துறையில் மட்டும் இதுவரை 3.5 லட்சம் வேலைவாய்ப்புகளை நாம் இழந்திருக்கிறோம்.
கே.எஸ்.அழகிரி

அதேபோன்று, இந்தியப் பொருளாதாரத்தை வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பா.ஜ.க அரசு திணறிவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகட்டும், தற்போதைய ஆட்சியின் 100 நாள்களாகட்டும், இதுவரை பா.ஜ.க அரசு ஏதாவது ஒரு துறையில் சாதித்துள்ளது என்று சொன்னால் அது, நாட்டின் மிகப்பெரிய செய்தியாக இருக்கும்.

மேலும் அவர், “பா.ஜ.க-வின் 5 ஆண்டுகால ஆட்சி என்பது இந்தியாவின் துயரமாகும். `சீனாவின் துயரமான மஞ்சள் நதிபோல இந்தியாவின் துயரம் பா.ஜ.க ஆட்சிதான்.

KS Alagiri
KS Alagiri
கா.முரளி

இந்திய அரசாங்கத்தின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகள் அனைத்தும் சிதைந்து, ஒளி இழந்து காணப்படுகின்றன. பா.ஜ.க-வின் ஆட்சியில் மக்கள் மிகவும் துன்பப்பட்டுவருகின்றனர்” என்றார்.