Published:Updated:

``மத்திய நிதியமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

கே.எஸ்.அழகிரி

``சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த நிலைமையைப்போல ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

``மத்திய நிதியமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

``சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த நிலைமையைப்போல ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியிலிருந்து வரும் 7-ம் தேதி ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார். ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய நிதியமைச்சர் ஒரு மாநிலத்துக்குச் சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. அந்த விஷயத்தில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்னை வேறு மாதிரி திரும்பியிருக்கும். சுதந்திரத்துக்கு முன்பு இந்த நாட்டில் தீண்டாமை, சமூகநீதி ஏற்றத்தாழ்வு, வறுமை, சாதி வேறுபாடு எனப் பல்வேறு பிரச்னைகள் இருந்துவந்தன. அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் என்ற ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார்.

``மத்திய நிதியமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த நிலைமையைப் போன்று ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ராகுல் காந்தி சமூகப் புரட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசு எதையும் ஜனநாயகரீதியாகப் பார்ப்பதில்லை. கூட்டாட்சித் தத்துவத்தையும் அவர்கள் நோக்குவதில்லை. அவர்கள் தனிப்பட்ட ஒருவிதத்தில் இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பான உணர்வு ஏற்பட்டுள்ளது. தேசத்தின் இறையாண்மையைக் காக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார்.

ராகுல் காந்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி

ஜி.எஸ்.டி-யில் குறைந்த நிதியை ஈடுசெய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கறுப்புப் பணமும் கைப்பற்றப்படவில்லை,15 ரூபாய்கூட போடப்படவில்லை. ஆனால், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவே ராகுல் காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி பேரணி மேற்கொள்கிறார்" என்றார்.