Published:Updated:

‘அமைச்சர்களின் பேச்சுக்கு முதல்வர் எதிர்வினை ஆற்றுவது தவறில்லை’- சொல்கிறார் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

“சில பேருக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவர்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமலும் இருக்கலாம். அதற்காக கொஞ்சம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்” - திருநாவுக்கரசர்

‘அமைச்சர்களின் பேச்சுக்கு முதல்வர் எதிர்வினை ஆற்றுவது தவறில்லை’- சொல்கிறார் திருநாவுக்கரசர்

“சில பேருக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவர்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமலும் இருக்கலாம். அதற்காக கொஞ்சம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்” - திருநாவுக்கரசர்

Published:Updated:
திருநாவுக்கரசர்

‘ராகுல் காந்தி நடைப்பயணம், கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமை யார்...’ என்பது உள்ளிட்ட பரபர கேள்விகளோடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், எம்.பி-யுமான திருநாவுக்கரசரைச் சந்தித்தேன்...

“ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் முக்கிய நோக்கம் என்ன?”

“இந்தியா நிறைய வேற்றுமைகள் நிறைந்த நாடு. அந்த வேற்றுமைகள் கடந்து பல்வேறு மொழிகளுக்கான அங்கீகாரம், அந்தந்த மாநில கலாசாரத்தை மதித்து காங்கிரஸ் இவ்வளவு காலம் ஆட்சி செய்தது. ஆனால், அதை பிரித்தாளும் முயற்சியில் இன்று பா.ஜ.க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எனவே எல்லோரும் சமமாக வாழ வேண்டும் என்பதற்காக பிரிந்து கிடக்கும் மக்களை ஒருங்கிணைப்போம் என்கிற தலைப்பில் இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த யாத்திரைக்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.”

கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்
கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்

“இந்த யாத்திரையில் யாரையெல்லாம் ராகுல் காந்தி சந்திக்கிறார்?”

“யாத்திரையின் போது காலை, மாலை என நேரம் கிடைக்கையில் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் போன்றவர்களை நேரம் ஒதுக்கி ஓய்வெடுக்காமல் இடை இடையே சந்திக்கிறார். சாதி, மதம், மொழி, மாநில வேறுபாடு கடந்து ராகுல் காந்தி போகிற வழி நெடுக மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. இது ஆள் பிடித்தோ, காசு கொடுத்தோ கூட்டப்படும் கூட்டம் கிடையாது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ராகுல் காந்தி எனும் நபருக்காக தாமாக முன் வந்து கலந்து கொள்கிறார்கள்”

 ‘அமைச்சர்களின் பேச்சுக்கு முதல்வர் எதிர்வினை ஆற்றுவது தவறில்லை’- சொல்கிறார் திருநாவுக்கரசர்

“குழந்தைகளுடன் ராகுல் காந்தி நடைப்பயணம் சென்றதற்கு எதிராக தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதே?”

“இது பா.ஜ.க-வின் மட்டரகமான ரசனையுடன் கூடிய விமர்சனம். நடந்து போய் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை கை காட்டுகிறது, இன்னொரு குழந்தை உள்ளே ஒடி வருகிறது, ஒரு குழந்தையின் ஷூ கலன்று போனபோது அவரே மாட்டிவிடுகிறார். இது போல் நடக்கும் நிகழ்ச்சிகள் எதார்த்தமாக நடக்க கூடியது. இந்த யாத்திரை என்ன ஆர்மி பரேடா... ராணுவ வீரர்  மாதிரி யாரையும் பார்க்க மாட்டேன், சிரிக்க மாட்டேன் என்று போக முடியுமா. சிரிச்சா சிரிப்பார். கை காட்டினால் கை காட்டுவார். கட்டிப்பிடித்தால் கட்டிபிடிப்பார். குழந்தைகளாக இருந்தால் தூக்கி கொஞ்சுவார். இதெல்லாம் மனிதாபிமானமுள்ள தலைவர் செய்யக்கூடிய விஷயம். விமர்சானம் முன் வைக்கும் பா.ஜ.க-வினர் இது போல் யார் நடப்பார்களா. அமித் ஷா, மோடி அல்லது வேறு யாராவது பிரதிநிதித்துவப்படுத்தி பா.ஜ.க சார்பில் நடக்கவிட்டுவிடுவார்களா. அதனால் வயிற்றெரிச்சலில் இந்த மாதிரி செயலாற்றுகிறார்கள்”

“ஜால்ரா அடிப்பவர்களைதான் ராகுல் காந்தி நம்புகிறார் என்கிற விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே?”

“நான் வேறு கட்சியிலிருந்துதான், காங்கிரஸில் இணைந்து பல ஆண்டுகள் பயணித்து கொண்டிருக்கிறேன். நானென்ன தினமும் ராகுலுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டா இருக்கிறேன். நாங்கள் டெல்லி ஆபிஸையே சுற்றி கொண்டு, யாரையும் போய் பார்த்து லாபி செய்வதில்லையே. எல்லோருக்கும் அப்படிதான். சில பேருக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவர்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமலும் இருக்கலாம். அதற்காக கொஞ்சம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். என் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது நான் இனிமேல் கட்சியில் தொடர முடியாது என்று போகிறார்கள், தனி கட்சி ஆரம்பிக்கிறார்கள். கட்சியில் இருப்பது, போவது அவர்கள் உரிமை. ஆனால், இதுவரை இருந்த கட்சியை விமர்சிப்பது ஏற்புடையதா என்பதை பார்க்க வேண்டும்”

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்
ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

“கட்சியில் இருக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது, விமர்சிப்பது ஏற்றுகொள்ளப்படாத போதுதானே வெளியே போயும் விமர்சிக்க வேண்டி இருக்கிறது?”

“கருத்து வேறுபாடுகள் சிலருக்கு வரலாம், போகலாம். இது மகாத்மா காந்தி காலத்திலிருந்தே இருக்கதான் செய்கிறது. ஜனநாயக முறையில் சில விஷயங்கள் விவாதிக்கப்படும் போது அது பரிசீலிக்கப்படதான் செய்கின்றது. இருந்தலும் பெரிய தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியே போகும் போது வருத்தப்படக் கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது”

தி.மு.க பொதுக்குழு
தி.மு.க பொதுக்குழு

“சமீபத்தில் தி.மு.க அமைச்சர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்து முதல்வரின் செயல்பாடுகளை ஒரு மூத்த அரசியல் தலைவராக எப்படி பார்க்கிறீர்கள்?”

“விளையாட்டு என்று நினைத்து அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அது விளையாட்டு அல்ல... ஜோக் அல்ல என்று அப்படியாகவோ அல்லது திரித்தோ சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்பட்டு வரும் விமர்சனங்களை முதல்வர் பார்க்கும்போது, ‘எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது’ என்று எடுத்து கூறுகிறார். முதலமைச்சராக ஆட்சி விஷயங்களையும், கட்சி தலைவராக கட்சியையும் பார்க்க வேண்டும். அப்படி இருக்கும் போது, கூட இருக்கும் நீங்களும் ஏதாவது தொல்லை கொடுத்தால் அது சரியில்லையே என பேசுவது எந்த வகையிலும் தவறு கிடையாது. ஒரு கட்சித் தலைவருக்கு தன்னுடைய தொண்டர்களிடமோ, நிர்வாகிகளிடமோ கெஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது,  கொஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது, மிஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது”

இந்த கேள்வி பதில்களோடு 23/10/2022 தேதியில் வெளியான ‘ஜூனியர் விகடன்’ இதழில் கீழ்கண்ட கேள்விகளுக்கு, தனது அனுபவத்தின் வெளிபாடாக விரிவான பதில் அளித்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்.

“கட்சியிலிருக்கும் கோஷ்டிகளையே ஒன்றிணைக்க முடியாத ராகுல், இந்தியாவை எப்படி ஒன்றிணைக்கப் போகிறார்?”

“ `இந்த யாத்திரையில், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் ஏன் அழைக்கவில்லை?’ என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியிருக்கிறதே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, பெண் ஒருவரை நியமிக்கப்போவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நீங்கள் யாரைப் பரிந்துரைப்பீர்கள்?’’

“மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் முயற்சி செய்யவில்லையா?’’

“தி.மு.க பொதுக்குழுவில், அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருத்தப்பட்டுப் பேசியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“இந்தித் திணிப்பை எதிர்த்து போராடிவரும் தி.மு.க குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?’’