Published:Updated:

“நாங்கள் தி.மு.க-வின் மவுத் பீஸ் அல்ல!”

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்றாலும், ‘இன்னும் ரெண்டே மாதத்தில், தலைவர் மாற்றப்பட்டுவிடுவார்’ என்று சத்தியமூர்த்தி பவனிலிருந்தே எதிர்கோஷ்டியினர் தொடர்ச்சியாக ‘தோ கிலோமீட்டர்’ சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

“நாங்கள் தி.மு.க-வின் மவுத் பீஸ் அல்ல!”

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்றாலும், ‘இன்னும் ரெண்டே மாதத்தில், தலைவர் மாற்றப்பட்டுவிடுவார்’ என்று சத்தியமூர்த்தி பவனிலிருந்தே எதிர்கோஷ்டியினர் தொடர்ச்சியாக ‘தோ கிலோமீட்டர்’ சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ‘ஸ்டாப்’ போர்டு காட்டுவது என்று பரபரப்பு காட்டிவரும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியைச் சந்தித்தேன்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`உயர் சாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடாதா?’’

“இட ஒதுக்கீடு என்ற சித்தாந்தமே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்டதுதானே தவிர, யாருக்கும் எதிரானது அல்ல. இட ஒதுக்கீட்டை முதன்முதலில் கொண்டுவந்த நீதிக்கட்சியேகூட அவர்களது காலத்தில், உயர் சாதியினருக்குக் குறிப்பிட்ட அளவில் இட ஒதுக்கீடு அளித்திருக்கிறார்கள்.

 “நாங்கள் தி.மு.க-வின் மவுத் பீஸ் அல்ல!”

இப்போது 70 ஆண்டுக்கால சுதந்திர இந்திய வரலாற்றில் நாம் நிறைய வளர்ச்சியடைந்திருக்கிறோம். இந்தக் கால மாற்றத்துக்கேற்ப உயர் சாதியில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆனால், எங்களைப்போல் அல்லாமல், தேர்தலில் வாக்குகளை அள்ளும் நோக்கிலேயே இப்படி யொரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது பா.ஜ.க.’’

‘`இரண்டாயிரம் வருடங்களாக சாதியின் பெயரால், மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை இந்த 70 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில், இட ஒதுக்கீட்டின் மூலமாக அம்மக்கள் பெற்றுவிட்டார்கள் என்கிறீர்களா?’’

‘`இந்தக் கேள்வியே இப்போது எழவில்லை. முதல் அரசியல் சட்டத் திருத்தம், மண்டல் கமிஷன் மற்றும் இதே உரிமைக்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களின் வழியாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற வேண்டிய உரிமைகளைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கான விகிதாச்சாரம் சட்ட ரீதியாகவே வழங்கப்பட்டுவிட்டது. எனவே, இட ஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்ட மக்கள் உயர் சாதியினராகவே இருந்தாலும்கூட, பொருளாதார ரீதியாக ஏழையாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றுதான் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. எனவே, இது யாருடைய உரிமையையும் பறிப்பதாகாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்!’’

“ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாய் கொண்ட ஒருவரை ‘ஏழை’ என்று ஏற்றுக்

கொள்கிறீர்களா?’’

“எட்டு லட்சம் ரூபாய் என்பது தனிநபரது வருமானக் கணக்கல்ல... ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வருமானமாகத்

தான் எட்டு லட்சம் ரூபாய் வரம்பை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிகப்படியான இந்தத் தொகை வரம்பையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.’’

‘’இன்னும் இரண்டு மாதங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்று கராத்தே தியாகராஜன்...?’’

(கேள்வியை இடைமறித்து)

‘`இல்லையில்லை... அது எங்கள் உட்கட்சிப் பிரச்னை. அவை பற்றி நான் பேட்டியில் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை. கொள்கை ரீதியான விஷயங்கள் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன்.’’

‘`எந்த அடிப்படையில், ‘அரசியலுக்கு ரஜினிகாந்த் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று கூறியிருக்கிறீர்கள்?’’

‘`நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பிறகு எனக்கு ரஜினிகாந்தின் நடிப்பு மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. திரைப்படத்துறையில் அவர் வெற்றி பெற்றதுபோன்று அரசியலில் வெற்றி பெற முடியாது என்று நான் கருதுகிறேன். என்னுடைய உள்ளுணர்வுதான் இதைச் சொல்கிறது. எனவே இதற்கு என்ன அடிப்படை என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.

மென்மையான இயல்பு கொண்ட அவருக்கு அரசியல் பொருந்தாது என்பது என் கருத்து. அவர்மீது நான் கொண்டுள்ள பற்றால், அன்பால், பாசத்தால் இந்தக் கருத்தைச் சொல்கிறேன், அவ்வளவுதான்.’’

‘`ரஜினிகாந்த், அரசியலுக்கு வரவேண்டாம் என்று நீங்கள் சொல்வதன் பின்னணியில் தி.மு.க இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே... இது எந்த அளவுக்கு உண்மை?’’

‘`தி.மு.க-வின் மவுத் பீஸ் அல்ல காங்கிரஸ்! ஒரு கருத்தைச் சொல்லவேண்டும் என்றால், மிகவும் திறமைபடைத்தவர்கள் தி.மு.க-வினர். எங்கள் மூலமாகத்தான் அவர்கள் சொல்லியாக வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, என் கருத்தை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம்.’’

‘`நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், பா.ஜ.க சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளா? அல்லது, ராகுல்காந்தி ஒப்புக்கொண்டதுபோல், வாரிசு அரசியலா?’’

‘`ஒரு வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பதுபோல, தோல்விக்கும் ஆயிரம் காரணங்கள் உண்டு. இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானிலுள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் போய் நான்கு குண்டுகளைப் போட்டுவிட்டு வந்து, அதை சாதனைச் செய்தியாக இங்கே பரப்பினார்கள். அவை இந்தி பேசும் வட மாநில மக்களிடம் எடுபடவும் செய்தது. இது ஒரு காரணம்.

 “நாங்கள் தி.மு.க-வின் மவுத் பீஸ் அல்ல!”

பணமதிப்பிழப்பு நடவடிக்கைத்தோல்வி, ரிசர்வ் வங்கி மற்றும் சி.பி.ஐ-யில் ஏற்பட்ட குழப்பங்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க கையகப்படுத்திய விதம் மற்றும் மோடியின் கொள்கைகளை விமர்சித்து எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் பேசிய பேச்சுகள் வட இந்திய மக்களிடம் சரியான முறையில் சென்று சேராதது... இவைதான் எங்கள் தோல்விக்கான காரணங்கள்.’’

‘`காங்கிரஸ் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், தத்தமது வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை, பிரசாரத்தில் காட்டவில்லை என்று ராகுல்காந்தியே வருத்தப்பட்டிருக்கிறாரே..?’’

‘`இதுபோன்று எந்தச் செய்தியையும் பொதுவெளியில் பகிரங்கமாக ராகுல்காந்தி சொல்லவில்லை. யார்மீதும் குற்றச்சாட்டும் வைக்கவில்லை. கட்சியின் செயற்குழுவில் அவர் பேசியதாகச் சொல்லப்பட்ட செய்தியைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.

‘இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையவில்லை; காங்கிரஸ் தலைவர்கள்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஏனெனில், காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடையே சரியான முறையில் இவர்கள் எடுத்துச் செல்லவில்லை’ என்பதுதான் என் கருத்து.’’