முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக, காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க-வுக்குத் தாவியிருப்பது மத்தியப்பிரதேச அரசியலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் காங்கிரஸ் கட்சியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மறு ஆய்வு செய்துகொள்ளவேண்டிய நெருக்கடியில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களே குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அப்படித் தமிழகத்தில் குரல் கொடுத்துவருபவர்களில் ஒருவரான, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலத்திடம் உரையாடினோம்...

‘‘மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்றுவருகிற அரசியல் மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராகவும், மூன்று முறை எம்.பி-யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறிக் கட்சி தாவுகிறார் என்றால், கொள்கையில் பிடிப்பு இல்லை என்றுதான் அர்த்தம். மற்றபடி, பா.ஜ.க தோல்வியைச் சந்திக்கிற இடங்களிலெல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் குதிரைபேரத்தில் விலைக்கு வாங்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையின் தொடர்ச்சிதான் இதுவும்.”

‘‘காங்கிரஸ் கட்சிக்குள் இளம் தலைவர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறதே?”

‘‘காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கட்சி. உதாரணத்துக்கு, மத்தியப்பிரதேசத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள், கமல்நாத்தான் முதல்வராக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 23 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதான் கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் கமல்நாத் முதல்வராக்கப்பட்டார்.’’

“ரஜினிகாந்த், ‘இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன்’ என்கிறாரே?”

‘‘தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரியார், அண்ணா, கலைஞர் களத்தில் இறங்கி உழைக்கவில்லையா? புரட்சி தானாக வராது. அவர்தான் களத்தில் இறங்கி உழைத்து, தான் எதிர்பார்க்கிற புரட்சியை உருவாக்க வேண்டும்.”

‘‘தமிழக பா.ஜ.க-வுக்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸில் எளியவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்கிற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்தக் குற்றச்சாட்டு தவறானது. சத்தீஸ்கர் மாநிலங்களவை இடத்துக்குப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மிக எளிய பின்னணி கொண்ட ஒருவர்தான் தேர்வு செய்யப்படவிருக்கிறார். காங்கிரஸின் அகில இந்தியத் தலைமைக்கும் நேரு குடும்பத்தைச் சேராத பலரும் தலைவராக இருந்துள்ளனர்.”

‘‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வரவேற்றனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்கள் அதிகமாக உள்ளதா?’’

‘‘காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் அதிகமாக உள்ளது என்பதுதான் இதற்கான அர்த்தம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தலைவர்களையெல்லாம் சிறைக்கு அனுப்பி, ஜனநாயக விரோதப்போக்கைக் கடைப்பிடித்ததைத்தான் எதிர்க்கிறோம்.”

“காங்கிரஸ் கட்சி தோல்விகளிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“மாநிலத் தலைமையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்களை மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்திருக்க வேண்டும். தற்போதுவரை அது நடக்கவில்லை. ராகுல் காந்தியின் ராஜினாமாவுக்குப் பிறகு அடுத்து யார் நிரந்தர காங்கிரஸ் தலைவர், அடுத்த தேர்தலை யார் தலைமையில் சந்திக்கப்போகிறோம் என்கிற கேள்விகளுக்கும் விடை இல்லை. இவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டும்.’’

‘‘பா.ஜ.க-வை எதிர்கொள்ள காங்கிரஸின் அணுகுமுறையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா?’’

‘‘அணுகுமுறையில் எந்த மாற்றமும் தேவையில்லை. தலைமை தொடர்பான இத்தகைய நிலையற்ற தன்மை நீண்ட காலம் தொடர முடியாது என்று பல தலைவர்களும் தெரிவிக்கின்றனர். மேலும், காங்கிரஸ் காரிய கமிட்டி பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இது நல்லதுதான். காரிய கமிட்டிக்கு மட்டுமல்லாது தலைமைக்கும் தேர்தல் நடத்தினால்தான், தொண்டர்கள் மத்தியில் புத்தெழுச்சியை உருவாக்கும்.”

“காங்கிரஸ் - தி.மு.க இடையே நிறைய கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்தக் கூட்டணி அடுத்த தேர்தலுக்கும் தொடருமா?”

‘‘இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் விருப்பம். இது சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல. சி.ஏ.ஏ எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என அடிப்படையான பல்வேறு விஷயங்களில் ஒரே நிலைப்பாட்டில்தான் தி.மு.க-வும் காங்கிரஸும் இருக்கின்றன. சில விஷயங்களில் மாற்றுக் கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.”