Published:Updated:

EWS: ``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது... இதயபூர்வமாக வரவேற்கிறோம்!'' - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது. எந்த ஒரு தரப்புக்கும் அது உரியதல்ல." - கே.எஸ்.அழகிரி

EWS: ``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது... இதயபூர்வமாக வரவேற்கிறோம்!'' - கே.எஸ்.அழகிரி

``சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது. எந்த ஒரு தரப்புக்கும் அது உரியதல்ல." - கே.எஸ்.அழகிரி

Published:Updated:
கே.எஸ்.அழகிரி

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ், அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்றே கூறியிருக்கிறார்கள். 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பை மீறவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்துப் பிரிவினருக்குமான நீதியை அது வழங்குமென்றால் அதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

சோனியா - ராகுல் காந்தி
சோனியா - ராகுல் காந்தி

இந்தியாவில் 5,000 ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை. ஒரு சிலரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்தக் காலத்தில் நீதி என்று சொல்லி, அதை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து, நாடாளுமன்றத்தில் முதன்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தி இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இன்றைய நடைமுறையைப் பின்பற்றி, இன்றைக்குப் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது.

10 சதவிகித இட ஒதுக்கீடு
10 சதவிகித இட ஒதுக்கீடு

2005-2006-ல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன் சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014-ல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவிகிதம் வறுமையில் வாடுகிறார்கள். இவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

தற்போது பொதுப்பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதைச் சட்ட வல்லுநர்களும், அரசியல் அறிஞர்களும், சமூகப் பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சமூகநீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுக்காலமாக சிரமப்பட்ட பெரும் பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இப்போது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப்போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்துக்குப் பொதுவானது. எந்த ஒரு தரப்புக்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை எனக் கருதி தமிழக காங்கிரஸ் அதை இதயபூர்வமாக வரவேற்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.