Published:Updated:

``ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஓபிஎஸ்!" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ஜெயக்குமார்

``ஆளில்லாத டீ கடைல டீ ஆத்துற கதைதான் இது. ஒட்டுமொத்தமா கட்சி இன்றைக்கு இ.பி.எஸ் தலைமையில் செயலாற்றிக்கொண்டிருக்கு." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார் ஓபிஎஸ்!" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

``ஆளில்லாத டீ கடைல டீ ஆத்துற கதைதான் இது. ஒட்டுமொத்தமா கட்சி இன்றைக்கு இ.பி.எஸ் தலைமையில் செயலாற்றிக்கொண்டிருக்கு." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார்

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களாக 14 பேரை ஓ.பி.எஸ் நியமித்ததை, `ஆளில்லாத டீ கடைல டீ ஆத்துற கதைதான் இது' என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ``இந்த விடியாத அரசு பொறுப்பேற்று சொத்துவரி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த கொடுங்கோல் ஆட்சி குறித்து ஜனநாயகப்பூர்வமாக மக்களுக்கு எடுத்துச்சொல்கின்ற வகையில், இன்றைய தினம் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஓ.பி.எஸ் - ஜெயகுமார்
ஓ.பி.எஸ் - ஜெயகுமார்

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு, முதல் ஆர்ப்பாட்டம் வரும் 27-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவர் தலைமையில் நடைபெறவிருக்கிறது" என்றார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களாக 14 பேரை ஓ.பி.எஸ் நியமித்தது குறித்து ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``ஆளில்லாத டீ கடைல டீ ஆத்துற கதைதான் இது. ஒட்டுமொத்தமா கட்சி இன்றைக்கு இ.பி.எஸ் தலைமையில் செயலாற்றிக்கொண்டிருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அவங்க பக்கம் இன்றைக்கு ஒருத்தரும் இல்ல. ஒருத்தரும் இல்லாமல் ஒரு சில பேரை போட்டுவிட்டு, நான்தான் கட்சி-னு சொன்னால், அதை எள்ளி நகையாடக்கூடிய ஒரு விஷயமாகத்தான் பார்க்க முடியும்" என்று கூறினார்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னைக்கு வருகை தரும் பிரதமரை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திப்பார்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, ``மாநிலத்தின் நலன் கருதி, இந்த மக்கள் விரோத ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துச்சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி, பிரதமரைச் சந்திப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸை பொறுத்தவரை அவர் சந்திப்பாரா, இல்லையா என்பது எனக்கு எப்படித் தெரியும்" என்று பதிலளித்தார்.