Published:Updated:

"பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே குறைத்துவிட்டோம்" - பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துவிட்டது." - பழனிவேல் தியாகராஜன்

"பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே குறைத்துவிட்டோம்" - பழனிவேல் தியாகராஜன்

``பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே தமிழக அரசு குறைத்துவிட்டது." - பழனிவேல் தியாகராஜன்

Published:Updated:
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ``பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோதும், தமிழக அரசு குறைக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது, மக்களவையிலிருந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்திருக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``நவம்பர் 2021-ல் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021-ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்திருக்கிறது. மேலும், ஒன்றிய அரசின் வரிக்குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

அதாவது, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்திருக்கிறது. அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாகக் குறைந்திருக்கிறது. எனவே, தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டிருக்கிறது. டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 பைசா குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாநில அரசு மீன்வளத்துறையிலும், போக்குவரத்துத்துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கிவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்திருக்கிறது. மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்குவதற்கு ஊதிய வாய்ப்புகள் இல்லை... எனவே சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு வரிச் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.