Published:Updated:

"`பீட்டா' அமைப்பு வெளிநாட்டினரிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறது!"- அமைச்சர்‌ ராமச்சந்திரன்

அமைச்சர் ராமச்சந்திரன்

"சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழிகளில் நீரோடைகளை கடப்பதற்கு பாலம் கட்டும் பணி குறித்தும் முறையான ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்." - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மின்சார வசதி இல்லாததால் மின்சார வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வந்துள்ளேன். தற்போது இந்தப் பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசின் அனுமதி பெறவேண்டி உள்ளது. அதிகாரிகளை இது குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழிகளில் நீரோடைகளை கடப்பதற்கு பாலம் கட்டும் பணி குறித்தும் முறையான ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்‌ கோயில் யானை விவகாரத்தை பொறுத்தவரை பீட்டா அமைப்பு வெளிநாட்டினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இதுபோன்று செயல்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை 'ஜெயமால்யதா' நன்றாக உள்ளது. அதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"`பீட்டா' அமைப்பு வெளிநாட்டினரிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறது!"- அமைச்சர்‌ ராமச்சந்திரன்

கடந்த அ.தி.மு.க. அரசு, தமிழகத்தின் கடன் தொகையை 6 லட்சம் கோடியாக உயர்த்திவிட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில், பொறுப்பேற்ற நம்முடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடனை சுமையை சரி செய்வதற்கு பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளார். பல்வேறு புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என ஆயிரம் ரூபாய் வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது" என்றார்.