Published:Updated:

நீலகிரி: `ஊருக்குள் வரும் காட்டுயானைகளை வனத்துக்குள் விரட்ட தனிக்குழு!’ - வனத்துறை அமைச்சர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

"காடுகளை அழித்தே இங்கு கட்டுமானங்களும், தோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் யானை-மனித எதிர்கொள்ளல்களை உடனடியாகத் தவிர்த்துவிட முடியாது. படிப்படியாகத்தான் குறைக்க முடியும்" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக வனத்துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன், அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தனது சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பினார்.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

இன்று காலை ஊட்டிக்கு வந்த அமைச்சருக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்புக்குப் பின் நேராக தமிழகம் மாளிகைக்குச் சென்ற அவர், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர், ``நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா பணிகள் நல்ல முறையில் நடைபெற்றுவருகின்றன. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை என யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை.

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

இதன் மூலம், வெளியிலிருந்து ஆக்ஸிஜன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குன்னூரில் செயல்பட்டுவரும் பாஸ்டியர் ஆய்வகத்தில் மருந்துக் குப்பிகள் தயாரிக்கும் ஏற்பாடும் நடைபெற்றுவருகின்றன. நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியை இந்த வாரம் அரசு தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யானை-மனித எதிர்கொள்ளல்களைப் பொறுத்தவரை உடனடியாகத் தடுக்க முடியாது. யானை வழித்தடங்களில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு தோட்டங்களும், வீடுகளும்,கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனால் படிப்படியாகத்தான் எதிர்கொள்ளல்களைக் குறைக்க முடியும். ஊருக்குள் வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்டுவதற்காகத் தனிக்குழு அமைக்கப்படும்" என்றார்.

 ஊட்டியில் உள்ள திமுக அலுவலகம்
ஊட்டியில் உள்ள திமுக அலுவலகம்

செய்தியாளர் சந்திப்புக்குப் பின் ஊட்டியிலுள்ள திமுக அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் ராமச்சந்திரன், அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்ததால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு