Published:Updated:

கட்சியினரோடு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் - ரகசிய காப்பை மீறியதாக சர்ச்சை

கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்.
கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்.

புதிதாக வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன், வனத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே கட்சி உறுப்பினர்களோடு பங்கேற்றது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட ராமச்சந்திரன் 4,105 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2006 முதல் 2011 வரை கதர் வாரியத்துறை அமைச்சராக இவர் பொறுப்பு வகித்திருந்ததால், இந்த முறை இவருக்கு அதே கதர் வாரியத்துறை அல்லது சுற்றுலாத்துறை கிடைக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர்.
கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர்.

யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு வனத்துறை வழங்கப்பட்டது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை கட்சி பேதங்களை மறந்து பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்.

இந்தநிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று வனத்துறை அதிகாரிகளுடன் சென்னையில் முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யுவராஜ் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். வனப்பரப்பை அதிகரிப்பது, மனிதர்கள் - வன விலங்கு எதிர்கொள்ளல்களைக் குறைப்பது, யானைகள் இறப்பைத் தடுப்பது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர்.
கட்சியினருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர்.

வனத்துறை அமைச்சர், வனத்துறையின் உயரதிகாரிகள் பங்கேற்ற முதல் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களான ஊட்டியைச் சேர்ந்த இளங்கோ, கோத்தகிரியைச் சேர்ந்த எக்ஸ்போ செந்தில் ஆகிய இருவரும் பங்கேற்றனர். அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத கட்சியினர் அமைச்சரின் ஆய்வுக்கூட்டதில் பங்கேற்றது, ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயல் என எதிர்க்கட்சியினர் சமூக வளைதலங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். வனத்துறை அமைச்சர் ராமசந்திரனின் முதல் ஆய்வுக் கூட்டமே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு