Published:Updated:

ஓ.பன்னீர்செல்வம்: `லேசான கொரோனா அறிகுறி; உடல்நிலை சீராக உள்ளது!’ - எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மேலும், அவர் சீரான உடல்நிலையுடன், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம்: `லேசான கொரோனா அறிகுறி; உடல்நிலை சீராக உள்ளது!’ - எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

ஓ.பன்னீர்செல்வம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மேலும், அவர் சீரான உடல்நிலையுடன், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டார்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோன தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்த நிலையில், அதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ``தமிழ்நாடு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன், கடந்த ஜூலை 15-ம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை
எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

அவர் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மேலும், அவர் சீரான உடல்நிலையுடன், மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொண்டார்" என கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஓ.பி.எஸ்-ஸின் உடல்நிலை குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ``கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" ட்வீட் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஒருபுறம் அ.தி.மு.க-வில், பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஓ.பி.எஸ்-ஸை நீக்கப்பட்டும், மறுபுறம் ஓ.பி.எஸ், அதிமுக இப்போதும் தன்னிடம் தான் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் கடிதம் அனுப்பியது மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமி உட்பட பலரை கட்சியிலிருந்து நீக்கியும் வருகிறார். இந்த நிலையில், ஓ.பி.எஸ்-ஸை, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் எனக் குறிப்பிட்டு ஸ்டாலின் ட்வீட் செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.