Published:Updated:

``இந்தியா முன்னேற்றமடைய கல்விமுறையில் மாற்றம் தேவை!" - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

``தற்போது நாடு வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். 2047-ல் இந்தியா, சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை." - ஆர்.என்.ரவி.

``இந்தியா முன்னேற்றமடைய கல்விமுறையில் மாற்றம் தேவை!" - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி

``தற்போது நாடு வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். 2047-ல் இந்தியா, சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை." - ஆர்.என்.ரவி.

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஊட்டியிலுள்ள ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்‌.ரவி தலையில் இன்று காலை தொடங்கியது. ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் வரவேற்றார். பல்கலைக்கழகங்களின் மானியக்குழுத் தலைவர் ஜெகதீஷ் சிறப்புரையாற்றினார்.

துணைவேந்தர்கள் மாநாடு
துணைவேந்தர்கள் மாநாடு

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ``நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் நிலவிவந்தன. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியிருக்கிறது. தற்போது, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஜம்மு காஷ்மீருக்குச் சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியிருக்கின்றனர். அதேபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் இருந்துவந்தன. குறிப்பாக, மாவோயிஸ்ட்டுகளின் பிரச்னை அதிகமாக இருந்தது. ஆனால், அரசின் துரித நடவடிக்கையால் தற்போது அங்கும் மாவோயிஸ்ட் பிரச்னை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டைத் துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. நாடு என்பது ஒரே குடும்பம். இங்கு சமூகத்தில் எந்தவித ஏற்றத் தாழ்வும் கிடையாது. அனைத்துக் குடிமக்களும் அமைதியாக வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முந்தைய கல்விமுறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால், தற்போது நாடு வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். 2047-ல் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்விமுறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி

நம்மை அச்சுறுத்திவந்த நாடுகள்கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டுக்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவை எடுத்தது. இந்திய அளவில் 70 சதவிகித மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்துவருகின்றனர். மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடம் பன்முகத் திறமைகளை உருவாக்க பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பாடுபட வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பல்கலைக்கழகங்கள் பன்முகத்திறன்கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளைப் பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும்" என உரையை முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism