Published:Updated:

``தமிழக அரசு ஆன்மீக அரசு தான்; எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை” - தருமபுர ஆதீனம்

தருமபுர ஆதீனம்

இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆதீனங்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

``தமிழக அரசு ஆன்மீக அரசு தான்; எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை” - தருமபுர ஆதீனம்

இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆதீனங்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

Published:Updated:
தருமபுர ஆதீனம்

தமிழக சட்டப்பேரவையில் வருகின்ற மே 5-ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆதீனங்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தமிழகம் முழுவதிலிருந்தும் 11 ஆதீனங்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் ஆதீனங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுர ஆதீனம், ``தமிழக அரசு ஆன்மீக அரசு தான்” என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய தருமபுர ஆதீனம், ``திருமடங்களுக்குப் பட்டா நிலங்கள் கொடுப்பது பற்றிப் பேசி அதற்கான வழிவகைகளை அரசு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை கொடுத்திருக்கிறோம். ஆதீனங்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. திருக்கோயில்களோடு திருமடத்துக் கோயில்களுக்கு உரிய வகைகளை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்த அரசு ஆன்மீக அரசு தான். அவர்கள் கொள்கையை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். எங்கள் கொள்கையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்கள் கொள்கையில் அவர்கள் தலையிடவில்லை" எனப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism