Published:Updated:

`தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்!’ - நிலம் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

RB Udhayakumar
RB Udhayakumar

ஜெயலலிதா பேரவை -அம்மா சாரிடிபிள் டிரஸ்ட் மூலமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது.

RB Udhayakumar
RB Udhayakumar

இன்று ப்ளஸ்டூ மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை, போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு உதவும்.

RB Udhayakumar
RB Udhayakumar

விவசாயியாக பிறந்து முதல்வராக உயர்ந்த எடப்பாடியார், மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அம்மா வழியில் செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியிலே இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும், அதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.

RB Udhayakumar
RB Udhayakumar

தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ராக்கெட் ஏவுதள கோரிக்கைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ள தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.