Published:Updated:

`மனதார பாராட்டுகிறேன்!’ - லண்டன் மருத்துவர்கள் முன் அசத்திய எடப்பாடி பழனிசாமி

கலிலுல்லா.ச

கிங்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றையும் தமிழகத்தில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

edappadi palanisamy
edappadi palanisamy

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழில் பேசினார். அப்போது அவர், ``கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகின்ற அனைத்து டாக்டர்களையும் மனமார, இந்த நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

edappadi palanisamy
edappadi palanisamy
`என்னப்பா நம்ம ஊரு இட்லிலாம் கிடைக்குது!' - லண்டனைக் கலக்கும் ஈ.பி.எஸ்

அதுமட்டுமல்லாமல், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றையும் தமிழகத்தில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான முழு ஆதரவையும் தமிழக அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன். இங்கிருக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தும் தமிழக மக்களுக்கும் கிடைக்கும் சூழ்நிலையை கிங்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு தமிழக அரசின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்ததில், கிங்ஸ் மருத்துவமனை உண்மையிலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாகத் திகழ்கிறது. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரும் திட்டம் பாராட்டுக்குரியது. இன்றைக்கு ராபின்ஸன் ஹெலிகாப்டர் இருக்கிற இடத்தை பார்வையிட்டோம். சென்னையிலும் அதை அமைப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.

`முதல்வருடன் லண்டன் செல்வது ஏன்?' - அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் 3 ஒப்பந்தங்கள்

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தொலைதூரத்தில் இருந்து நகரத்திற்கு வந்து சிகிச்சை பெறமுடியாதபோது, விலை மதிக்க முடியாத உயிரை இழந்துவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக குறித்த காலத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து நோயை குணப்படுத்தி, அவர்களை பிழைக்கவைக்கக்கூடியது அரிய சாதனை. அந்தச் சாதனையை கிங்ஸ் மருத்துவமனை செய்துகொண்டிருக்கிறது.

tamilnadu cm
tamilnadu cm

நம்முடைய பகுதிகளிலும் விபத்துகள் அதிகமாக நடக்கின்ற காரணத்தினால், கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு 3 மணி நேரம் கழித்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும். அதேபோல நம்முடைய மாநிலத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.