Published:Updated:

``தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்!''- ஆளுநர் ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழ்நாட்டில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் இன்னும் பல இடங்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்!''- ஆளுநர் ரவி

``தமிழ்நாட்டில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் இன்னும் பல இடங்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுகிறது." - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில், ஆளும் தி.மு.க அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் அரசியல் மோதல்போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற 75-வது சுதந்திர விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ``மகாத்மா காந்தி ஒருவர்தான் இந்தியர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கினார். ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர், வசதி படைத்தவர்களுக்கும், கல்வியறிவு படைத்தவர்களுக்கும்தான் அனைத்தும் என்ற நிலை நாட்டில் மீண்டும் நிலவியது. கல்வி, தொழில், சுகாதாரம் போன்றவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால், தமிழ்நாட்டில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் இன்னும் பல இடங்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை இன்னும் நிலவி வருகிறது. ஏன் இந்தக் கொடுமை? தீண்டாமையைக் கடைபிடிப்போருக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கின்றன. பட்டியலினப் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாது. மேலும், பட்டியலினத்தவர்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களில், 86 சதவிகிதம் பேர் தண்டனைகளிலிருந்து தப்புவதால்தான் குற்றங்கள் தொடர்கின்றன" என்றார்.